சேத்தியாத்தோப்பு அருகே வீடு வீடாக சென்று மாணவர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறும் ஒன்றிய பள்ளி ஆசிரியர்கள்

சேத்தியாத்தோப்பு அருகே வாழைக்கொல்லை கிராமத்தில் வீடு வீடாக சென்று மாணவர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறும் ஒன்றிய பள்ளி ஆசிரியர்கள்.
சேத்தியாத்தோப்பு அருகே வாழைக்கொல்லை கிராமத்தில் வீடு வீடாக சென்று மாணவர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறும் ஒன்றிய பள்ளி ஆசிரியர்கள்.
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வாழைக்கொல்லை கிராம ஒன்றிய பள்ளி ஆசிரியர்கள், வீடு வீடாக சென்று மாணவர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறி கரோனா விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வாழைக்கொல்லை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. தீபாவளியை முன்னிட்டு இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இன்று (நவ. 12) பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பராஜ் தலைமையில் அனைத்து ஆசிரியர்களும் மாணவ, மாணவிகளின் வீட்டுக்கே சென்று சீருடை, நோட்டுப் புத்தகம், இனிப்புகள் கொண்ட பாக்ஸ் வழங்கி தீபாவளி வாழ்த்துகளையும் கூறி வருகின்றனர்.

மேலும், மாணவர்கள் கவனமுடன் பட்டாசு வெடிக்க வேண்டும், அரசு வலியுறுத்தும் கரோனா விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திச் செல்கின்றனர்.

ஆசிரியர்களின் இந்த செயலுக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்..

நேற்று (நவ. 11) மாணவர்களுடன் சேர்ந்து தலைமை ஆசிரியர் புஷ்பராஜ், ஆசிரியர்கள் கருணாகரன், கீதா, வள்ளி, அன்பகம், கிருத்திகா, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி குரளரசன், ஊராட்சி மன்ற துணை தலைவர் புகழேஸ்வரன் ஆகியோர் தேசிய கல்வி நாளையும் சிறப்பாக கொண்டாடினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in