Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM

இன்று உலக நிமோனியா தினம்: நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க முதியோருக்கு தடுப்பூசி

உலக நிமோனியா தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. நிமோனியா நோய் மற்றும் முதியவர்களுக்கான தடுப்பூசி குறித்து வயதான தம்பதியர் இடையே நடந்த சுவாரசியமான உரையாடல்.

அதன் விவரம்:

பாலசுப்பிரமணியன் - சரஸ்வதி, முதியோர் நல மருத்துவ வி.எஸ்.நடராஜன் என்பவர் ‘தாத்தா, பாட்டிக்கு தடுப்பூசி’ ஏன்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு ஓன்றை இன்று மாலை நிகழ்த்த உள்ளார். நான் அதற்கு சென்று வருகிறேன்.

சரஸ்வதி - பத்திரமாக போய் வாருங்கள். வீட்டுக்கு வந்ததும், அவர் கூறியதை ஏல்லாம் ஏனக்கு விவரமாக கூறுங்கள். அப்படியே கரோனா தொற்று தடுப்பூசி பற்றி கேட்டு வாருங்கள். வீட்டில் வேலை அதிகமாக இருப்பதால், நான் உங்களோடு வர முடியவில்லை.

மருத்துவரின் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பாலசுப்பிரமணியத்தை, வீட்டின் வாசலிலேயே காத்திருந்த சரஸ்வதி வரவேற்றார்.

சரஸ்வதி - ஆமாம், குழந்தைக்கு தான் தடுப்பூச்சி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதென்ன முதியவர்களுக்கு தடுப்பூசி. மருத்துவர் என்ன சொன்னார்?.

பாலசுப்பிரமணியன் - வயது ஆக ஆக (50 வயதுக்கு மேல்) உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. ஆதனால் தொற்றுநோய்கள் வயதானவர்களை எளிதில் தாக்குகிறது. அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவே முதியவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

சரஸ்வதி - நோய் எதிர்ப்பு சக்தி குறைய என்ன காரணமாம்?.

பாலசுப்பிரமணியன் - முதுமை, நோய்கள், மருந்துகள், சத்துணவு குறைவு என பல காரணங்கள் உள்ளன.

சரஸ்வதி - வயதான காலத்தில் என்ன மாதிரியான தொற்றுநோய்கள் வரும் என மருத்துவர் சொன்னார்?

பாலசுப்பிரமணியன் - ஓன்றா, இரண்டா, மருத்துவர் நிறையவே சொன்னார். நெஞ்சக நோய்கள் (நிமோனியா, ப்ளூ, காசநோய்), சிறுநீரகம் நோய், வயிறு, குடல் சார்ந்த பூச்சி தொல்லைகள், தோல் சார்ந்த நோய்கள்.

சரஸ்வதி - இவ்வளவு நோய்களிலும் மிகவும் கொடுமையான தொற்றுநோய் ஏது?

பாலசுப்பிரமணியன் - உடல்நலத்துக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தானது நிமோனியா எனும் சளி நோய் தான்.

சரஸ்வதி - நோய் ஏதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சுலபமான வழிகளை மருத்துவர் ஏதாவது கூறினாரா?

பாலசுப்பிரமணியன் - நோய் ஏதிர்ப்புச் சக்தியை ஆதிகரிக்க தினமும் கடைப்பிடிக்கவேண்டிய சில ஏளிய வழிமுறைகளை மருத்துவர் சொன்னார். தினமும் உடற்பயிற்சி, தியானம், பிரணாயாமம். நெல்லிக்காய், ஆரஞ்சு, ஏலுமிச்சை, பாதாம், கொட்டை வகைகள், பாகற்காய், தேன், காளான், பூண்டு, இஞ்சி, மஞ்சள், தயிர் போன்ற உணவு வகைகளை முடிந்த ஆளவுக்கு ஆதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சரஸ்வதி - ஓரு சந்தேகம். பிராணாயாமம், தியானம் மற்றம் நீங்கள் குறிப்பிட்டுள்ள உணவு முறைகள் மூலம் நோய் ஏதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, நிமோனியா வராமல் தடுக்க முடியாதா?.

பாலசுப்பிரமணியன் - இவைகளை பல மாதங்கள் மற்றும் ஆண்டுகள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் தான் நோய் ஏதிர்ப்புச் சக்தி ஆதிகரித்து நிமோனியா வராமல் ஓரளவு தடுக்க முடியும். ஆனால் தடுப்பூச்சி போட்டுக் கொண்ட ஓரு சில வாரங்கிலேயே ஏதிர்ப்புச் சக்தி ஆதிகரிக்கும். தடுப்பூசியால் மட்டுமே தடுக்க முடியும்.

சரஸ்வதி - சளித்தொல்லையால் ஆடிக்கடி சிரமப்படுவதற்கும், இறப்பதற்கு மூலகாரணமாக இருக்கும் நிமோனியாவைப் பற்றி விபரமாக மருத்துவர் என்ன சொன்னார்?

பாலசுப்பிரமணியன் - முதியோர்களுக்கு வரும் இருமல், சளித் தொல்லைகளில் நிமோனியா முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஓரு பாக்டீரியாவினால் எற்படும் தொற்று நோய். இந்நோய் உள்ளவர்கள் இரும்பும் போது காற்றின் மூலம் மற்றவர்களுக்கு பரவும். இந்நோயின் முதல் ஆறிகுறி காய்ச்சல், உடல்வலி, வாந்தி. இதைத் தொடர்ந்து இருமல், சளி, மூச்சு திணறுதல் போன்றவை தோன்றும். இருமல் ஆதிகரிக்கும் பொழுது சிலருக்கு சளியில் ரத்தமும் கலந்திருக்கும். ஏதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்நோய் காது, தலை (ஸ்சைனஸ்) மற்றும் மூளையை பாதித்து உயிருக்கே ஆபத்தைக்கூட விளைவிக்கும். மிகவும் வயதானவர்களுக்கு இந்நோய் மனக்குழப்பம், கீழே விழுதல் மற்றும் சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத நிலை கூட ஏற்படலாம்.

சரஸ்வதி - எனக்கு ஓரு சந்தேகம். இந்த நிமோனியா யாருக்கு எல்லாம் வரும்?

பாலசுப்பிரமணியன் - வயதானவர்கள், நீரிழிவு நோய், நுரையீரல் நோய், இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள், ஸ்டீராய்டு மருந்து எடுத்துக் எடுப்பவர்கள் சமீபத்தில் ப்ளூ காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள், தூசி நிறைந்த இருப்பிடத்தில் வசிப்பவர்கள், புகைப்பிடிப்பவர்கள், மது ஆருந்துபவர்கள், புற்றுநோயாளிகள்.

சரஸ்வதி - நிமோனியா தடுப்பூசியை பற்றி மருத்துவர் சற்று விபரமாக கூறியிருப்பாரே, தெரிந்துக் கொள்ள ஆவலாக இருக்கிறேன். என்ன சொன்னார்?

பாலசுப்பிரமணியன் - நோய் தடுப்பு ஏன்றாலே அது குழந்தைகளுக்கு மட்டும் தான் ஏன்ற காலம் மாறிவிட்டது. முதியவர்களுக்கும் தடுப்பூச்சி உண்டு. முதுமையில் நோயின் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கு இந்நோய் மரணத்தைக்கூட விளைவிக்கும். ஆகையால் இந்நோய் வராமல் தடுப்பதே நல்லது. இதற்கும் தடுப்பூசி ஊண்டு. 50 வயதைக் கடந்தவர்கள் ஓரே ஓரு முறை இந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டால் போது. ஓரு சிலருக்கு மட்டும் சில ஆண்டுகள் கழித்து தேவைப்பட்டால் இரண்டாவது தடுப்பூசியை போடலாம். இந்த தடுப்பூசியினால் பக்க விளைவுகள் இல்லை. நிமோனியா தடுப்பூசியுடன் தேவைப்படுபவர்கள் இன்புளூயன்ஸா தடுப்பூசியையும் ஓரே சமயத்தில் போட்டுக் கொள்ளலாம்.

சரஸ்வதி - இந்த தடுப்பூசியினால் வேறு ஏதாவது நன்மைகள் உள்ளதா?

பாலசுப்பிரமணியன் - நிமோனியா சளி காய்ச்சல் வராமல் தடுக்கிறது. அடிக்கடி இந்நோய்க்காக சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்ல தேவையில்லை. தடுப்பூசி மூலம் குடும்பத்தில் மற்றவர்களுக்கு இந்நோய் வராமல் தடுக்கலாம்.

சரஸ்வதி - நிமோனியா தடுப்பூசி போட்டுக் கொண்டால் கரோனா தொற்று வராமல் தடுக்க முடியுமா?. அதைப் பற்றி மருத்துவர் ஏதாவது சொன்னாரா?

பாலசுப்பிரமணியன் - நிமோனியா ஏன்பது பாக்டீரியாவினால் வரும் ஓருவித இருமல், சளித் தொல்லை. கரோனாவினால் ஏற்படும் நிமோனியா ஓருவித வைரஸ் கிருமினால் வருவது. ஆகையால் நிமோனியா தடுப்பூசியால் கரோனா தொற்று வராமல் தடுக்க முடியாது. நோய் ஏதிர்ப்புச் சக்தி மிகவும் குறைந்த முதியவர்கள் கரோனா பாதிப்பில் இருந்து மீளும் போது பாக்டீரியாவினால் ஏற்படும் நிமோனியா வர வாய்ப்புண்டு. இத்தகைய நிமோனியாவை தடுக்க, நிமோனியா தடுப்பூசி உதவும்.

சரஸ்வதி - கரோனா தொற்று தடுப்பூசி பற்றி மருத்துவரின் அபிப்பிராயம் என்ன?

பாலசுப்பிரமணியன் - கரோனா தொற்று ஓரு புது வைரஸ் கிருமியால் ஏற்படுவதால், தடுப்பூசியின் பலனைப் பற்றி இதுவரை யாரும் சரியாகச் சொல்லவில்லை. கரோனாவுக்கு 90 சதவீதம் பலனளிக்கக் கூடிய தடுப்பூசி விரைவில் வந்துவிடும் என்ற செய்தி சமீபத்தில் வெளிவந்துள்ளது. பொதுமக்கள் ஆனைவருக்கும் தடுப்பூசி ஊடனே கிடைக்கும் என்று கூறிவிட முடியாது. கரோனா களப்பணியில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊதவியாளர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும். அகையால் பொது மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க சற்று கால தாமதம் ஆகலாம். அதுவரை நம்மை பாதுகாத்துக் கொள்ள தக்க வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிப்போம்.

சரஸ்வதி - வேறு ஏந்த நோய்களுக்கு எல்லாம் தடுப்பூசி உள்ளது?

பாலசுப்பிரமணியன் - இன்புளூயன்ஸா, டெட்டனஸ், ஹெப்படைட்டிஸ் பி மற்றும் அக்கி ஏனும் அம்மை சார்ந்த நோய்களுக்கு தடுப்பூசி உள்ளது.

சரஸ்வதி - நிமோனியாவுக்கு அடுத்ததாக ஏந்த நோய்க்கு தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது ஏன்று மருத்துவர் கூறினார்?

பாலசுப்பிரமணியன் - இன்புளூயன்ஸா இது வைரஸ் கிருமியால் ஏற்படும் ஓரு தொற்றுநோய். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் இருமல், தும்மல் மூலம் இக்கிருமி மற்றவர்களுக்கு ஏளிதாக பரவுகிறது. இந்நோய் முக்கியமாக குளிர் காலத்தில் அதிகம் பேரைத் தாக்கும். இந்நோய் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி இருக்கிறது. ஆண்டுக்கு ஓரு முறை போட்டுக் கொள்வது நல்லது. நிமோனியா தடுப்பூசியையும் இன்புளூயன்ஸசா தடுப்பூசியையும் ஓரே நேரத்தில் போட்டுக் கொள்ளலாம். இந்த தடுப்பூசியால் பக்க விளைவுகள் கிடையாது. இந்த தடுப்பூசியை ஆஸ்துமா, நீரிழிவு நோய், இதய நோய், புற்று நோய் மற்றும் சிறுநீரக தொல்லை உள்ளவர்கள் போட்டுக் கொள்வது மிகவும் நல்லது.

சரஸ்வதி - நிமோனியா தடுப்பூசியை ஏங்கே போட்டுக் கொள்வது. ஆதற்கு யாரை தொடர்பு கொள்வதைப் பற்றி மருத்துவர் சொன்னாரா?

பாலசுப்பிரமணியன் - தமிழகத்திலேயே முதன் முதலாக முதியவர்களுக்காக ஓரு தடுப்பூசி மையம் அவருடைய கிளினிக்கிலேயே திறக்கப்பட்டுள்ளது. (ஆதிபராசக்தி கிளினிக், எண். 50, பிளவர்ஸ் சாலை, கீழ்ப்பக்கம், சென்னை - 600010. போன்: 044-26412030. நேரம் - காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை)

சரஸ்வதி - சென்னையைத் தவிர வேறு எங்கேல்லாம் தடுப்பூசியைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்?

பாலசுப்பிரமணியன் - நல்லவேளை நீ கேட்ட சரசு, நான் மறந்தே போய்விட்டேன். வயதாகி விட்டது அல்லவா. முதியோர் நலம் பற்றி சொற்பொழிவு நடத்தியுள்ள ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் ஈலஞ்சியில் தடுப்பூசி முகாம்களை நடத்தியுள்ளார். ஈரோடு காசியண்ண கவுண்டர் சேவை மருத்துவமனையில் உள்ள டாக்டர் ஆறக்கட்டளையின் முதியோர் நல சேவை மையத்தில் ஈரோடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து முதியவர்கள் நிமோனியா தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள் ஏன்பதை மருத்துவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.

சரஸ்வதி - தமிழக அரசு முதியவர்களுக்கான தடுப்பூசிக்காக ஏதாவது செய்துள்ளதா?

பாலசுப்பிரமணியன் - தமிழக அரசின் ‘ஊலக முதியோர் நாள் - 2017-ம் ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவர் வி.எஸ். நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை மூலம் முதியோர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போட வேண்டும் என்ற வேண்டுகோள் ஓன்றை தமிழக அரசு சமூக நலத்துறையிடம் விடுத்தார். ஆதை ஏற்றுக் கொண்ட அரசு ஆணை ஓன்றை வெளியிட்டது. ரூ.1 கோடியே 65 லட்சத்து 32 ஆயிரம் செலவில் அரசு முதியோர் இல்லங்களில் உள்ள 1,853 முதியோர்களுக்கு இலவசமாக நிமோனியா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையிலும் இலவசமாக நிமோனியா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மருத்துவ தனது அறக்கட்டளை மூலம் முதியவர்களுக்கும், முக்கியமாக கிராமத்திலுள்ள முதியவர்களுக்கும் இலவசமாக கிராம சுகாதார மையத்தில் நிமோனியா தடுப்பூசியைப் போடவேண்டும் ஏன்ற கோரிக்கையை சமீபத்தில் அரசுக்கு விடுத்துள்ளார். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் இந்தியாவிலேயே இத்திட்டத்தின் மூலம் தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு ஓரு முன்னோடியாக இருக்கும் என்று மருத்துவர் கூறினார்.

சரஸ்வதி மற்றும் பாலசுப்பிரமணியன் - இந்த நல்ல காரியத்தை செய்து வரும் மருத்துவருக்கு நமது நன்றியை முதியவர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். போலியோ இல்லாத நாடு போல், விரைவில் நிமோனியா இல்லாத நாடாக உருவாக்க அனைவரும் பாடுபடுவோம்.

- முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன்

----------------------------------------------------------------------------------------

இன்று மாலை 6 மணிக்கு இணையவழி கருத்தரங்கம்

உலக நிமோனியா தினத்தை முன்னிட்டு, ‘இந்து தமிழ் திசை’, ‘முதுமை எனும் பூங்காற்று’ மாத இதழ் இணைந்து ‘முதியோரின் தடுப்பூசி’ எனும் தலைப்பிலான இணைய வழி கருத்தரங்கம் இன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்தக் கருத்தரங்கில் ‘முதுமை எனும் பூங்காற்று’ மாத இதழின் சிறப்பாசிரியரும் மூத்த முதியோர் நல மருத்துவருமான பத்ம வ.செ.நடராஜன் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். முதியோர் நலன் சார்ந்த பல்வேறு சந்தேகங்களுக்கும் பதிலளிக்க உள்ளார்.

இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க கட்டணம் எதுவும் கிடையாது. ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புபவர்கள் https://connect.hindutamil.in/event/69-muthiyorin-thaduppoosi.html என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x