Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM

இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 125 தமிழக படகுகளை ஏலத்தில் விற்க நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

தமிழக மீனவர்களின் படகுகள் தொடர்பாக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த 3 ஆண்டுகளில் இலங்கைகடற்படையால் பிடிக்கப்பட்ட 92 தமிழக மீன்பிடிப் படகுகள் அரசு மேற்கொண்ட தீவிர முயற்சியால் மீட்கப்பட்டு, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 2018-ம் ஆண்டு பல்வேறு நிகழ்வுகளில் இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 165 தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அரசுமீன்வளத் துறை அலுவலர்கள், மீனவ பிரதிநிதிகள், மெக்கானிக்குகள் மற்றும் தச்சர்கள் கொண்டகுழு இலங்கைக்கு அனுப்பப்பட்டது. அங்கு மீட்கும் நிலையில் உள்ள 36 விசைப்படகுகள் ரூ.47 லட்சத்து 95 ஆயிரம் அரசு நிதியின் மூலம் சீரமைக்கப்பட்டு தமிழகம் கொண்டுவரப்பட்டது.

மோசமான வாரனிலை காரணமாக 4 படகுகள் தமிழகம் கொண்டுவர இயலவில்லை. இலங்கையில் பல்வேறு துறைமுகங்களில்நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள மீட்க இயலாத நிலையில் உள்ள 125 படகுகளை அதன்உரிமையாளர்கள் அரசு ஏலம்மூலம் விற்று அத்தொகையைதங்களுக்கு வழங்க கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையில் அந்த படகுகளை ஆய்வு செய்து விற்பனை செய்யகுழு அமைக்கப்பட்டது.

கரோனா கட்டுப்பாடுகளால் இக்குழு இலங்கைக்கு சென்றுதமிழக படகுகளை விற்பனைசெய்யும் பணியை மேற்பார்வையிட இயலவில்லை. எனவே, இலங்கையில் உள்ள இந்திய தூதரக பிரதிநிதிகள் முன்னிலையில் மீட்க இயலாத தமிழக படகுகளை ஏலம் மூலம்விற்று, அத்தொகையை படகு உரிமையாளர்களிடம் வழங்க ஏதுவாக தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x