

*
ஆச்சி என்கிற பெயர் ஆஸ்கார் விரு தைக் காட்டிலும் பெரியது என்று நடிகை மனோரமா தெரிவித்திருக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசர் கண்ணதாசன் சமூக நல அறக் கட்டளை சார்பில் 22-ம் ஆண்டு விழா 2011-ம் ஆண்டு நடைபெற்றது. இதில் நடிகை மனோரமாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் பிறந் தாலும், நான் வளர்ந்ததெல்லாம் செட்டி நாட்டில்தான். எனக்கு பத்து வயது இருக் கும்போதே தாயார் செட்டிநாட்டுப் பகுதிக்கு வந்துவிட்டார். செட்டிநாட்டில் என் கால் படாத இடம் இல்லை. நடிக்காத மேடையும் இல்லை.
முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய நாடகத்தில் நடிப்பதற்காக எஸ்எஸ்ஆர் என்னை சென்னைக்கு அழைத்துச் சென்று நடிக்க வைத்தார். அந்த நாடகத்தைப் பார்த்த கவியரசர் கண்ணதாசன், 1958-ம் ஆண்டு `மாலையிட்ட மங்கை’ திரைப்படத்தில் என்னை அறிமுகப்படுத்தினார். ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த கலைச்சேவை செய்யக் காரணம், கவியரசர் கண்ணதாசனின் மோதிரக்கையால் குட்டு பட்டதுதான். எனக்கு நகைச்சுவை வராது என்று சொன்னபோது, `இல்லை, இல்லை, நீ நகைச்சுவையாக நடிப்பாய்’ என்று அவர் சொன்ன வார்த்தையால் இன்று நகைச்சுவை நடிகையாக விளங்குகிறேன்.
ஆச்சிகள் மீது எனக்கு அதிக அன்பு உண்டு. அவர்களது நேர்த்தியைக் கண்டு நான் பெருமூச்சு விட்டதுண்டு. இப்போது என்னை `ஆச்சி’ என்று அழைப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ஆச்சி என்ற பெயர் ஆஸ்கார் விருதைவிடப் பெரியதாகக் கருதுகிறேன். திரையுலகத்தினர் மட்டுமல் லாமல் தமிழகம் முழுவதும் என்னை ஆச்சி என்றுதான் அழைக்கிறார்கள்.
நான் கலைமாமணி, பத்ம உள்ளிட்ட விருதுகள் பெற்றுள்ளேன். இந்த விருதுகள் பெற்றுத்தந்த பெருமை செட்டிநாட்டையே சேரும் என்று மனோரமா பேசினார்.
இத்தகவலை கவியரசர் கண்ணதாசன் சமூக நல அறக்கட்டளையின் பொதுச்செய லர் கவிஞர் அரு.நாகப்பன் `தி இந்து'விடம் நேற்று தெரிவித்தார்.