Published : 11 Nov 2020 07:14 PM
Last Updated : 11 Nov 2020 07:14 PM

ஆவின் தீபாவளி பண்டிகை சிறப்பு இனிப்புகள்: கூடுதலாக 50 சிறப்பு விற்பனை நிலையங்கள்

சென்னை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் 6 வகையான சிறப்பு இனிப்புகளை தயாரித்து விற்பனை செய்கிறது. பொதுமக்கள் கூடும் இடங்களில் 50 சிறப்பு விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதாக ஆவின் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆவின் நிர்வாகம் இன்று வெளியிட்ட தகவல்:

“ஆவின் நிறுவனம் தரம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் வழங்கி வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கீழ்கண்ட 6 வகையான சிறப்பு இனிப்புகளின் விற்பனை பொதுமக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.

1) ஸ்டப்டு டிரை ஜாமுன் (250 கி) -ரூ.190.00,

2) நட்டி மில்க் கேக் (250 கி) -ரூ.190.00,

3) ஸ்டப்டு மோதி பாக் (250 கி) -ரூ.170.00

4) காஜு பிஸ்தா ரோல்(250 கி)-ரூ.225.00

5) பிளேவர்டு மில்க் பர்பி (250 கி) -ரூ.165.00

6) மேற்கண்ட 5 வகையான இனிப்புகள் அடங்கிய (Combo Pack) (500 கி) -ரூ.375.00

நெய் முறுக்கு (250 கி)-ரூ.100.00 மற்றும் ஆவின் பால் , பால் பொருட்கள்.

இவை அனைத்தும் உயரிய தரத்துடன் சுகாதார முறையில் தயாரிக்கப்படுவதால் இவற்றின் சுவை காரணமாகவும் தரம் காரணமாகவும் மக்கள் விரும்பி வாங்குகின்றனர். அதனால் விற்பனை அதிகமாகின்றது. எனவே, இரவு பகல் பாராமல் கூடுதலாக நபர்களை பயன்படுத்தி ஆவின் சிறப்பு இனிப்புகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சிறப்பு இனிப்புகள் வாங்க ஆர்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக அசோக் லே லேண்ட் கம்பெனி, ஹுண்டாய் கம்பெனி, நிசான் கம்பெனி, லயோலா கல்லூரி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களில் இருந்தும் அரசு அலுவலகங்கள், சிக்கன கூட்டுறவு சங்கங்கள் சார்பாகவும் ஆர்டர்கள் கோரப்பட்டுள்ளது.

இவற்றை மொத்தமாக வாங்க ( Bulk order) கீழ்கண்ட நபர்களின் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். 1) சிவகுமார் - 9345660380, 2) பௌர்ணமி – 9384092349, 3) தமிழன் - 9566860286 மற்றும் 4) சுமதி – 9790773955 .

இதனால் கூடுதலாக 50 தற்காலிக சிறப்பு இனிப்பு விற்பனை நிலையம் அமைத்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர பகுதிகளில் பேருந்து நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள் , மெட்ரோ ரயில் நிலையங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆவின் பண்டிகைக்கால இனிப்புகளை பொது மக்கள் சிரமம் இன்றி எளிதில் வாங்கும் வகையில் விற்பனைக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளுக்கு அருகில் உள்ள சிறப்பு விற்பனை நிலையங்களில் தீபாவளி இனிப்புகளை பெற்று கொள்ளுமாறு ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது”.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x