மக்கள் நல கூட்டு இயக்கம் மாபெரும் அரசியல் சக்தியாக மாறும்: வைகோ நம்பிக்கை

மக்கள் நல கூட்டு இயக்கம் மாபெரும் அரசியல் சக்தியாக மாறும்: வைகோ நம்பிக்கை
Updated on
1 min read

மக்கள் நல கூட்டு இயக்கம் மாபெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற மதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் அவர் பேசியதாவது: வைகோவுடன் நாலு பேர் தான் இருப்பார்கள் என பேசுகின்றனர். முகம் தெரியாத பலருக்கு முகவரியும், முகமும் கொடுத்தது மதிமுக. இந்த கட்சிக்கு ஆபத்து வரும்போதெல்லாம் துணையாக நின்றவர்கள் தொண்டர்கள்.

என் இயக்கத்தில் தொய்வு நிலை இருந்தது. அதை போக்கி சுறுசுறுப்படைய வைத்த கலைஞ ருக்கு நன்றி. அவர் எனக்கு குருவும் கூட, அறிவாளி, ராஜதந்திரி, சாணக்கியன். 96-ம் ஆண்டு, 2004-ம் ஆண்டு தேர்தலில் நாங்கள் தோற்ற போது மதிமுக கூண்டோடு காலி என்று சொன்னார்கள். அதைத்தான் இன்றும் சொல்கிறார்கள். என்னை யும், என் கட்சியையும், நாங்கள் தெய்வமாக போற்றும் பெண்கள் காப்பாற்றுவார்கள்.

தமிழகத்தில் சமீபத்தில் 3 ஆயிரம் இளைஞர்களிடம் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில் 1,052 பேர், அதாவது 76% மதிமுகவையும், 4% பேர் அதிமுகவையும், 5% பேர் திமுகவையும், 5% பேர் தேமுதிகவையும், 10% பேர் பாமகவையும் குறிப்பிட்டுள்ளனர். மதிமுகவுக்கு இளைஞர்களிடம் 76% சதவீத ஆதரவு பெருகி வருகி றது என்கிறது கருத்து கணிப்பு.

மக்கள் நல கூட்டு இயக்கம் தேர்தல் நேரத்தில் கூட்டணியாக மாறும். அதில் பல கட்சிகள் வரலாம் போகலாம். ஆனால் மக்கள் நல கூட்டு இயக்கம் சீட்டுக்காகவோ தேர்தலுக்காகவோ அமைக்கப்பட் டது இல்லை. மக்களுக்காக இது குறைந்த பட்சம் 10 ஆண்டுகளாவது நீடிக்கும். அதற்குள் தமிழகத்தில் மிகப் பெரிய அரசியல் சக்தியாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன் என்றார்.

இதையடுத்து புதுச்சேரி வந்த வைகோ, செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘மக்கள் நல இயக்கத் துக்கு தமிழக மக்கள் பெரிதும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த இயக்கத்தின் குறைந்தபட்ச செயல் திட்டம் நவ. 2-ம் தேதி வெளியிடப்படும். இதேபோல் புதுச்சேரியிலும் மக்கள் நல கூட்டு இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது.

இவ்வியக்கம் ஊழல் இல்லாத ஆட்சியை கொடுக்கும். மதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களால் கட்சிக்கு பாதிப்பில்லை என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in