

ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலுக்கு குரல் பதிவு மூலம் (வாய்ஸ் பதிவு) புகார் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
நான் எனது பெயரில் கட்சி நடத்தி வந்தேன். அதில், இருந்த இசிஆர் ராமசந்திரன், ராஜா ஆகியோரின் நடவடிக்கைகள் சரியில்லாததால் நீக்கினேன். அதன் பின் அவர்கள் ரவுடிகளோடு என் வீட்டுக்கு வந்து கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து நான் ஏற்கனவே, புகார் அளித்துள்ளேன்.
தற்போது நான் அரசியலை விட்டு விலகி இருக்கிறேன். இரண்டு மாதங்களுக்கு முன் சிறிய விபத்தில் சிக்கி உடல் நிலை மோசமான நிலையில் உள்ளது.
கால்கள் செயலிழந்து விட்டன. என்னால் எழுந்து நடக்க கூட முடியவில்லை. இந்த சூழ்நிலையில் ராஜா, ராமச்சந்திரன் ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொந்தரவுஅளிக்கிறார்கள். அவர்களால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளது. எனவே, நீங்கள் எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்ககை வேண்டும். அவர்கள் இருவர் மீதும் சட்டபூர்வ நடவடிக் கைஎடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ராஜா என்பவர் தீபாவின் கார் ஓட்டுநராக முன்பு பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.