

அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கொடுத்து உதவி தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்றுபங்காரு அடிகளார் தெரிவித்துள் ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையின் விவரம்:
தீபாவளி பண்டிகை என்பதுஅனைவரையும் தாய், தந்தையரைப் போலவும், நண்பர்கள், உற்றார், உறவினர் போலவும் பாவித்து கொண்டாடப்படும் பண்டிகையாகும். ஒருவருக்கு ஒருவர் கொடுத்து உதவுவது, இருப்பவன் இல்லாதவனுக்கும், இல்லாதவன் இருப்பவனுக்கும் பரிமாறிக் கொள்வதுதான் பண்டிகை. சந்தோஷமாக தருமம் செய்யும்போது அது நல்ல பலனைதருகிறது. உழைப்பால் உயரும்போதுதான் பலன் வருகிறது. உழைப்பு இல்லை என்றால் உடலுக்கு கேடாகவும், உண்மைக்கு புறம்பாகவும் பல மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. மெய்ஞானத்துடன் செயல்பட்டு உழைத்து வாழும்போதுதான் நல்ல எண்ணங் களும், நல்ல செயல்களும் உண்டாகும்.
அநியாயங்கள் பெருகும் போதுதான் கரோனா என்ற தொற்று வந்துவிட்டது. கரோனா தொற்றும் மாரியம்மைபோன்றது தான்.
அந்த காலத்தில் மாரியம்மை வந்தால் வேப்பிலையால் மஞ்சள்நீர் கொண்டு தெளிக்கும் வழக்கம் இருந்தது. வேப்பிலைக்கும், மஞ்சளுக்கும் மகிமை உண்டு.
இந்த தீபாவளி திருநாளில் இருந்து மெய்ஞானத்தையும், இயற்கையையும் போற்றி பாதுகாக்க வேண்டும். அன்பும்,பண்பும், பாசமும் இருக்க வேண்டும்.
தாய், தந்தையரை வணங்க வேண்டும். இயற்கையை போற்றி வணங்க வேண்டும். வாசகர்களுக்கும், பக்தர்க ளுக்கும், செவ்வாடைத் தொண்டர் களுக்கும் தீபாவளி வாழ்த்துகள் என்றார்.