காரைக்குடி அருகே ரேஷன் கடை திறப்பு விழாவில் அதிமுக பிரமுகர்கள், திமுக எம்எல்ஏ வாக்குவாதம்

காரைக்குடி அருகே ரேஷன் கடை திறப்பு விழாவில் அதிமுக பிரமுகர்கள், திமுக எம்எல்ஏ வாக்குவாதம்
Updated on
1 min read

காரைக்குடி அருகே ரேஷன் கடை திறப்பு விழாவில் ஆட்சியர் முன்னிலையில் அதிமுக பிரமுகர் களுக்கும் திமுக எம்எல்ஏவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற் பட்டது.

காரைக்குடி அருகே சின்னக் குன்றக்குடியில் நடந்த ரேஷன் கடை திறப்பு விழாவில் அதிமுக, திமுகவினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம். காரைக்குடி அருகே சின்னக் குன்றக்குடியில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அமைச்சர் ஜி.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திமுக எம்எல்ஏ கே.ஆர்.பெரியகருப்பன், அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன், அதிமுக செய்தித் தொடர்பாளர் மருதுஅழகுராஜ், ஆவின் தலைவர் அசோகன் ஆகி யோர் பங்கேற்பதாக இருந்தது.

இதையடுத்து அதிமுக, திமுகவினர் தங்கள் கட்சிப் பிரமுகர்களை வரவேற்று பேனர்களை வைத்திருந்தனர். இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால் டிஎஸ்பி அருண் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இதனால் அமைச்சர் உள்ளிட் டோர் நிகழ்ச்சிக்கு வரவில்லை. ஆட்சியர் ஜெய.ஜெயகாந்தன், கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ., பொன்னம்பல அடி களார், அதிமுக செய்தித்தொடர் பாளர் மருதுஅழகுராஜ் மட்டுமே கலந்து கொண்டனர்.

அப்போது, "மருதுஅழகுராஜ் மக்கள் பிரதிநிதி இல்லாததால் அவர் விழாவில் பங்கேற்கக் கூடாது. உடனடியாக வெளியேற வேண்டும்" என பெரியகருப்பன் தெரிவித்தார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் னர், மருதுஅழகுராஜ் வெளி யேறியதும் ரேஷன் கடை திறந்து வைக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து ஆவின் தலைவர் அசோகன் அங்கு வந்தார். அவ ருடன் மருதுஅழகுராஜ் உள்ளிட்ட அதிமுகவினர் ரேஷன் கடைக்குள் சென்றனர்.

நிகழ்ச்சியில் மருதுஅழகுராஜ் பங்கேற்கக் கூடாது எனக் கூறியது குறித்து பெரியகருப்பனிடம் ஆவின் தலைவர் அசோகன் கேட்டார். இதில் அசோகனுக்கும், பெரிய கருப்பனுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அதிமுக, திமுகவினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால், போலீஸார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in