

நாட்றாம்பள்ளி ஆட்டுச்சந்தை 7 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் அருகே சந்தை பனந்தோப்புப் பகுதியில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையன்று ஆட்டுச் சந்தை நடைபெறும்.
இந்த சந்தையில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றாம் பள்ளி, பச்சூர், வெலக்கல் நத்தம், மாதனூர், கிருஷ்ணகிரி, பர்கூர் மற்றும் தருமபுரி ஆகிய பகுதிகளில் இருந்து வாரந்தோறும் ஆயிரத்துக்கும் மேற் பட்ட ஆடுகள், கோழிகள் விற்ப னைக்காக இங்கு கொண்டு வரப் பட்டு வியாபாரம் செய்யப்படும்.
தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் நாட்றாம் பள்ளி ஆட்டுச்சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான ஆடுகள்,நாட்டு கோழிகளை வாங்கிச்செல் வார்கள். இந்நிலையில், தமிழகத் தில் கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் ஆட்டுச்சந்தை நடைபெற மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்க வில்லை. இந்நிலையில், கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து நாட்றாம்பள்ளி ஆட்டுச்சந்தையை திறக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, ஆட்டுச் சந்தையை திறக்க மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டார். அதன்பேரில், 7 மாதங்களுக்கு பிறகு நாட்றாம்பள்ளி சந்தை பனந்தோப்பு பகுதியில் நேற்று ஆட்டுச்சந்தை நடைபெற்றது.
திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, மாதனூர், கந்திலி, ஜோலார் பேட்டை, ஆந்திர மாநிலம் குப்பம் போன்ற பகுதிகளில் இருந்து சுமார் 1,200 ஆடுகள், 1,500-க்கும் மேற்பட்ட அசல் நாட்டு கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப் பட்டன. காலை 7 மணிக்கு தொடங் கிய வியாபாரம் காலை 10.30 மணிக் குள் விற்று தீர்த்தன. நேற்றுஒரே நாளில் சுமார் ரூ. 1 கோடிக்கு வர்த்தகம் நடை பெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சி யுடன் தெரிவித்தனர்.
ஆட்டுச்சந்தை திறக்கப்பட் டத்தையொட்டி நாட்றாம்பள்ளி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா ? என்பதை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய் தனர். வியாபாரம் முடிந்த பிறகு பேரூ ராட்சி சார்பில் சந்தை பனந்தோப்புப் பகுதியில் கிருமிநாசினி, நோய் தடுப்பு மருந்துகள் தெளிக்கப் பட்டன.