மயான பராமரிப்பு பணியை தனியாரிடம் தருவதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

மயான பராமரிப்பு பணியை தனியாரிடம் தருவதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

மின் மயான பராமரிப்பபை ஈஷா யோகா மையத்திடம் ஒப்படைப்பதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள மாநகராட்சி மின் மயானம், ஈஷா யோகா மையம் என்ற தனியார் நிறுவனத்தின் பராமரிப்பில் விடப்பட உள்ளது. இதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சிவா பேசியதாவது:

ஈஷா யோகா மையம் ஒரு மதம் சார்ந்த நிறுவனம். அவர்கள் உள்நோக் கத்துடன்தான் மயான பராமரிப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர். கோவை காந்திநகரில் இதேபோன்று மயான பராமரிப்பை ஏற்றுக்கொண்ட ஈஷா யோகா மையம், ஒரு சிவன் கோயிலை கட்டியுள்ளது.

மயிலாப்பூர், தேனாம்பேட்டை, ஆழ்வார் பேட்டை உள்ளிட்ட பகுதி மக்கள் பயன் படுத்தும் 18 ஏக்கர் கொண்ட மயான பூமியில் முதலில் 5 ஏக்கர் தனியாருக்கு கொடுக்கப் படுகிறது. சென்னை மாநகராட்சி ஒரு பிணத்துக்கு ரூ.1.500 வீதம் ஈஷா யோகா மையத்துக்கு கொடுக்கவுள்ளது. இவ்வளவு செலவு செய்வதற்கு, சென்னை மாநகராட்சியே இதை ஏற்று நடத்தலாமே. ஒரு மதம் சார்ந்த நிறுவனத்துக்கு மாநகராட்சி ஆதரவு அளிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் தனபால், மயிலாப்பூர் பகுதி செயலாளர் தயாளன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in