மாணவர்களின் உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்: கருத்து கேட்பு கூட்டத்தில் பெற்றோர் வலியுறுத்தல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மாணவர்களின் உயிருக்கு பள்ளி நிர்வாகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தி.மலை மாவட்டத்தில் நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்தில் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக கடந்த 6 மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. ஆன்லைன் மூலமாக தனியார் பள்ளிகளும், தொலைக்காட்சிகள் மூலமாக அரசுப் பள்ளிகளும் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வரும் 16-ம் தேதியில் இருந்து பள்ளிகளை திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு, கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்துக் கேட்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. அதன்படி, தி.மலை மாவட்டத்தில் உள்ள சுமார் 570 பள்ளிகளில் நேற்று கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர் ஆகியோரது தலைமையில் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருட்செல்வம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

கருத்து கேட்புக் கூட்டத் தில் பெற்றோர் பேசும்போது, “பள்ளிக்கு செல்வதை மாணவர் கள் விரும்பு கின்றனர். பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப, நாங்க ளும் சம்மதிக்கிறோம் என்றாலும், பள்ளி மூலம் மேற்கொள்ளப் பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்.

கழிப்பறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வகுப்பறை களை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவற்றையெல்லாம் ஒவ்வொரு நாளும் உறுதிப்படுத்த, பெற்றோர் பங்கேற்ற குழுவை ஏற்படுத்த வேண்டும். பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற்றுவிட்டதால், பாதிப்பு ஏற்பட்டால் பள்ளி நிர்வாகத்துக்கு தொடர்பு இல்லை என இருக்கக்கூடாது. மாணவர்களின் உயிருக்கு பள்ளியும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in