மதுரை செல்லூரில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்படும் கபடி வீரர்கள் சிலை: அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு

மதுரை செல்லூரில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்படும் கபடி வீரர்கள் சிலை: அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு
Updated on
1 min read

மதுரை மாநகராட்சி சார்பில் செல்லூர் ரவுண்டானாவில் ரூ.60 லட்சத்தில் கபடி வீரர்களைக் கவுரவப்படுத்தும் வகையில் அவர்களுக்கு சிலை அமைக்கப்படுகிறது.

பழம்பெரும் நகரான மதுரையின் சிறப்பை விளக்கும் வகையில் முக்கிய நகர ரவுண்டாக்களில் சிலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு பெருமையை விளக்கும் வகையில் ஜல்லிக்கட்டு காளையும், மதுரையின் பெருமையான தேர்திருவிழாவை நினைவு கூறும் வகையில் மீனாட்சியம்மன் தேரும், பழங்காநத்தத்தில் பத்துத் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று உலக நாடுகளில் வரவேற்கக்கூடிய சடுகுடு போட்டி என்று அழைக்கக்கூடிய கபடி வீரர்களின் பெருமையைப் போற்றும் வகையில் இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரை செல்லூர் பகுதியில் உள்ள ரவுண்டானாவில் கபடி வீரர்கள் சிலை ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த சிலைகளை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் விசாகன் மற்றும் அதிகாரிகள் இன்று பார்வையிட்டார்.

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறுகையில், ‘‘உலகில் பேஸ்கட்பால் வீரர்களை போற்றும் வகையில் அமெரிக்காவில் பாஸ்டன் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ளது.

அத்லெட்டிக் ஓட்டப்பந்தயம் வீரர்களின் சிறப்பை போற்றும் வகையில் இங்கிலாந்தில் சிலையும், வாலிபால் வீரர்களை போற்றும் வகையில் சீனாவிலும், அமெரிக்காவில் நியூயார்க்ல் டென்னிஸ் வீரர்களை போற்றும் வகையிலும், ஹாக்கி வீரர்களை போற்றும் வகையில் டெல்லியிலும், சேலம் ஏற்காட்டில் கால்பந்து வீரர்களை போற்றும் வகையிலும் அதனைத் தொடர்ந்து கபடி வீரர்களை போற்றும் வகையில் மதுரை செல்லூர் ரவுண்டானாவில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது, ’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in