Last Updated : 09 Nov, 2020 04:47 PM

 

Published : 09 Nov 2020 04:47 PM
Last Updated : 09 Nov 2020 04:47 PM

பாலியல் வழக்கு; நாகர்கோவில் காசிக்கு உடந்தையாக இருந்தவர்கள் விவரம் சேகரிப்பு: சிபிசிஐடி விசாரணை தீவிரம்

காசியிடம் சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில், அவரின் பாலியல் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த காசி (28) என்பவர் சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பழகி பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு பணம் பறித்துள்ளதாக கைது செய்யப்பட்டிருந்தார்.

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் மீது ஏற்கனவே 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த மேலும் ஒரு கல்லூரி மாணவி தன்னை, காசி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் கூறியதை தொடர்ந்து காசி மீது மேலும் ஒரு பாலியல் வழக்கை சிபிசிஐடி போலீஸார் பதிவு செய்தனர்.

இதனால் காசி மீது மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்திருந்தது. அவரை காவலில் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

சிபிசிஐடி டி.எஸ்.பி. அனில்குமார் தலைமையிலான போலீஸார் காசியிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஆசைவார்த்தை கூறி சென்னையில் இருந்து கல்லூரி மாணவியை கன்னியாகுமரிக்கு வரவழைத்து அவரை பாலியல் துன்புறுத்தல் செய்து செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருந்ததும், அதை காண்பித்து அந்த மாணவியிடம் பணம் பறித்ததும் தெரியவந்தது.

இவ்வழக்கில் சென்னையில் இருந்து வந்த சைபர் கிரைம் போலீஸார் அடங்கிய குழுவினர் காசியின் லேப்டாப்பில் உள்ள தகவல்களை சேகரித்து விசாரணை நடத்தினர். அப்போது பல பெண்களின் புகைப்படங்களை அவர் மார்பிங் செய்து சேமித்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் காசியின் பாலியல் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்களின் விவரங்களையும் சிபிசிஐடி போலீஸார் சேகரித்துள்ளனர். எனவே இவ்வழக்கில் மேலும் சிலரை கைது செய்து விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x