

திருவள்ளூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து, அம்மாவட்டங்களுக்குப் பொறுப்பாளர்களை நியமித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக, துரைமுருகன் இன்று (நவ. 09) வெளியிட்டுள்ள அறிவிப்பு:
"திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் தெற்கு ஆகிய மாவட்டங்கள், கட்சி நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், திருவள்ளூர் கிழக்கு - திருவள்ளூர் மத்திய - திருவள்ளூர் மேற்கு என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.
திருவள்ளூர் மத்திய மாவட்டம்
ஆவடி
பூவிருந்தவல்லி (தனி)
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
கும்முடிப்பூண்டி
பொன்னேரி (தனி)
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
திருத்தணி
திருவள்ளூர்
இந்த மூன்று மாவட்டங்களுக்குப் பின்வருமாறு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
திருவள்ளூர் மத்திய மாவட்டம்
பொறுப்பாளர் - ஆவடி சா.மு.நாசர்
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
பொறுப்பாளர் - டி.ஜெ.கோவிந்தராஜன்
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
பொறுப்பாளர் - எம்.பூபதி".
இவ்வாறு துரைமுருகன் அறிவித்துள்ளார்.