Published : 09 Nov 2020 03:11 AM
Last Updated : 09 Nov 2020 03:11 AM

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கரோனாவில் இருந்து 21 ஆயிரம் பேர் குணமடைந்தனர்

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றில் இருந்து 21,329 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலக கதிரியக்கவியல் தினம் ஆண்டுதோறும் நவ.8-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதைமுன்னிட்டு சென்னை ஓமந்தூரார்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீன் ஜெயந்திதலைமையில் கதிரியக்கவியல் துறையின் முக்கியத்துவம் குறித்தநிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. அத்துறை மருத்துவர்கள் சுஹாசினி, பாரதி, பிரியா, விஜயலட்சுமி, சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் மருத்துவமனை டீன் ஜெயந்தி கூறியதாவது: ராண்டஜன் எனும் இயற்பியல் அறிஞரால்1895-ம் ஆண்டு நவ.8-ம் தேதிஎக்ஸ்ரே கதிர்வீச்சு கண்டுபிடிக்கப்பட்டது. அன்று முதல் ஆண்டுதோறும் நவ.8-ம் தேதி உலக கதிரியக்கவியல் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

750 படுக்கைகள்

ஓமந்தூரார் மருத்துவமனை சிறப்பு கரோனா மருத்துவமனையாக கடந்த மார்ச் 27-ம் தேதி மாற்றப்பட்டது. மொத்தமுள்ள 750 படுக்கைகளில் 500 படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கரோனா தொற்றுடன் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட 23,037 பேரில் 21,329 பேர் (92.6சதவீதம்) குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதுவரை 17 ஆயிரம் சிடிஸ்கேன், 16 ஆயிரம் எக்ஸ்ரேபரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கரோனா தொற்றில் இருந்துகுணமடைந்தவர்களுக்கு கரோனாவுக்கு பிந்தைய நல்வாழ்வு மையத்தில் சிடி ஸ்கேன் பரிசோதனைகள் செய்ய தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலம் 2 அதிநவீன 16 கூறு சிடி ஸ்கேன் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலம் கரோனா தொற்றால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பில் இருந்து 98 சதவீதம்நோயாளிகள் மீண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x