

நாட்டிலேயே முதல்முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஒரு வழக்கின் விசாரணை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பி.தர்மராஜ், செயலாளர் ஏ.கே.ராமசாமி ஆகியோர் மீது சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணை யின்போது நீதிமன்றத்தில் தேவை யற்ற நிகழ்வுகள் எதுவும் நடை பெறாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படி நீதிபதிகள் ஏற்கெனவே உத்தர விட்டிருந்தனர். விசாரணைக்கு வரும்போது வழக்கில் தொடர் புடைய வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், இந்த வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் தவிர வேறு யாரையும் நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக் கப்பட்டிருந்தது.
நீதிபதிகள் உத்தரவு
அதே நேரத்தில் வழக்கின் விசாரணை பற்றி வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நீதிமன்ற வளாகத்தில் பெரிய திரை அமைத்து, செய்ய வேண்டும் என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருந்தனர்.
நேரடி ஒளிபரப்பு
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் முன்பு நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கியது. விசாரணை நடவடிக்கைகள் நீதிமன்ற வளாகத்தில் அமைக் கப்பட்டிருந்த பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்களை வெளியே இருப்ப வர்கள் அறிந்து கொள்ள ஒலிபெருக்கி வசதியும் செய்யப் பட்டிருந்தது. திரையின் எதிரே வழக்கறிஞர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் என ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் திரண்டு நின்று விசாரணை நடவடிக்கை களை கவனித்தனர்.
மேலும், தனியார் தொலைக் காட்சி சேனல்களிலும் நீதிமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. நீதி மன்றத் தில் நடைபெறும் ஒரு வழக்கின் விசாரணை நிகழ்வுகளை நீதிமன்ற அறைக்கு வெளியே இருப்ப வர்களும் தெரிந்துகொள்ளும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, நேற்றைய விசாரணையின்போது மதுரை வழக்கறிஞர் சங்கத் தலைவர் பி.தர்மராஜ் ஆஜரானார். குற்றம் சாட்டப்பட்ட சங்கத்தின் மற்றொரு நிர்வாகியான ஏ.கே.ராமசாமி ஆஜராகவில்லை. நேரில் ஆஜராக விலக்கு கோரி அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
தமிழக அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் சண்முகவேலாயுதம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக் கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், நாகசைலா, ஆர்.சி.பால்கனகராஜ் உள்ளிட்டோர் வாதிட்டனர்.
முழு அமர்வுக்கு மாற்றம்
நீதிமன்ற அவமதிப்பு குற்றச் சாட்டு தொடர்பாக நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கு தர்மராஜ் பதில ளித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை இரண்டுக்கும் மேற்பட்ட நீதிபதிகளைக் கொண்ட முழு அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணை தேதி குறிப்பிடப் படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
மாநகர கூடுதல் காவல் ஆணை யர் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் நீதிமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் நேற்று மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.