

பண்டிகை காலம் என்பதால், அரசு அலுவலகங்களில் லஞ்ச, ஊழல் நடைபெறுகிறதா என்று கண்காணிக்க கடந்த அக்.1-ம் தேதி முதல் நவ.6-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 54 அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு, மொத்தம் ரூ.4.30 கோடி, 519 பவுன் தங்க நகைகள், 6.5 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் அதிகபட்சமாக வேலூர் மண்டல மாசு கட்டுப்பாட்டு அதிகாரி பன்னீர்செல்வத்தின் வீடு, அலுவலகத்தில் இருந்து ரூ.3.59 கோடி, 450 பவுன் நகைகள், 6.5 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் மாவட்ட பதிவாளர் துறைடிஐஜி, குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளில் முறைகேடான வகையில் ரூ.1 கோடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 64 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை இடைநீக்கம் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறினர்.