புதுக்கோட்டை அருகே புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையில் முளைத்த புற்களை அழிக்க களைக்கொல்லி தெளிப்பு

புதுக்கோட்டை அருகே புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையில் முளைத்த புற்களை அழிக்க களைக்கொல்லி தெளிப்பு
Updated on
1 min read

புதுக்கோட்டை அருகே புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையில் முளைத்த புற்களை அழிக்க களைக்கொல்லி மருந்து தெளிக்கப் பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீழாத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 1.5 கிலோ மீட்டருக்கு குடியிருப்பு பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் கடந்த வாரம் தார் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த சாலையில் பல்வேறு இடங்களில் புற்கள் முளைத்ததால், தரமில்லாமல் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி சமூக வலைதளங் களில் சிலர் பதிவிட்டனர்.

இதையடுத்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சந்தோஷ்குமார் உத்தரவின் பேரில் புற்கள் அகற்றப்பட்டன. மேலும், எஞ்சிய சிறு சிறு புற்களை அழிக்கவும் மற்றும் இனிமேல் புற்கள் முளைக்காதிருக்கவும் கடந்த 2 நாட்களாக சாலையின் மீது களைக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது. சாலைக்கு களைக்கொல்லி தெளித்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in