Published : 08 Nov 2020 06:57 AM
Last Updated : 08 Nov 2020 06:57 AM

தமிழகத்தின் பெருமை கமலா ஹாரிஸ்

அமெரிக்க துணை அதிபராக பதவியேற்க உள்ள கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலன். இவர் சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த 1960-ம் ஆண்டில் ஷியாமளா மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு ஜமைக்காவைச் சேர்ந்த டொனால்டு ஹாரிஸை திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு 1964 அக்டோபர் 20-ம் தேதி கமலா தேவி ஹாரிஸ் பிறந்தார்.

சட்டம் பயின்ற கமலா, ஜனநாயக கட்சியின் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக வளர்ந்தார். அதிபர் வேட்பாளராக களமிறங்க தகுதியிருந்தும் போதிய நிதியுதவி இல்லாததால் அந்த போட்டியில் இருந்து விலகினார். இந்நிலையில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன், தனது துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை அறிவித்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு டக்ளஸ் என்பவரை கமலா ஹாரிஸ் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. டக்ளஸ் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவர். முதல் திருமணம் மூலம் டக்ளஸுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்களை கமலா ஹாரிஸ் தனது பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டு வாழ்கிறார். இந்திய தாய், ஆப்பிரிக்க தந்தைக்கு பிறந்தவர் கமலா ஹாரிஸ். இவரது கணவர் டக்ளஸ், யூதர் ஆவார்.

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்க உள்ள கமலா ஹாரிஸ், தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.

முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன், அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். இதேபோல அடுத்த அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிட்டு அதிபராக பதவியேற்பது உறுதி என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x