

முற்றிலும் எழுத படிக்கத் தெரியாத 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு எழுத்தறிவை வழங்கிட பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் ‘கற்போம் எழுதுவோம் இயக்கம்’ என்ற புதிய வயது வந்தோர் கல்வித் திட்ட அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் 60:40நிதியளிப்பு என்ற விகிதாச்சார அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்புதிய வயது வந்தோர் கல்வித்திட்டத்தை முற்றிலும் தன்னார்வலர்களைக் கொண்டு, மதிப்பூதி யம் ஏதுமின்றி செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 2020 நவம்பர் முதல் 2021 பிப்ர வரிக்குள் 3 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு எழுத்தறிவு கல்வி வழங் கிட அரசு முனைப்பு காட்டி வரு கிறது.
அந்த வகையில் ஒருங்கிணைந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட் டங்களில் உள்ள 22 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1,100 கிரா மங்களில் எழுத்தறிவு மையம் உரு வாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான தன்னார்வ ஆசிரியர்களின் பட்டியலும் தயா ராகி விட்டது. கிராமத்திற்கு 20 பேர்வீதம், 1,100 கிராமங்களுக்கு 20 ஆயிரத்து 200 பேருக்கு எழுத்தறிவை வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இதற்காக கிராமத்திற்கு ஒருவர்வீதம் 1,100 பேரை நியமிக்கவிண்ணப்பங்கள் விநியோகிக்கப்ப டுகின்றன. ஆனால், தற்போதே1,100 பேரைத் தாண்டி விண்ணப் பங்களை பெற்றுள்ளனர். இந்த திட்டம் பலரது வரவேற்பை பெற்ற போதிலும்,தன்னார்வலர்களுக்கு எவ்வித பணி தொகையும் வழங்காதது அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது.
இது கல்வி கற்றோரின் உழைப்பை சுரண்டு வதற்கு சமம்என்கிறார் அரசுப் பள்ளி பாதுகாப்புமேடை அமைப்பின் தலைவர் திருப்பதி. “ஏற்கெனவே செயல்படுத்தப் பட்ட கற்போம் பாரதம் திட்டத் தின் கீழ் கற்பிப்போருக்கு மதிப்பூதியமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது தொகை எதுவும் கிடையாது. ஒரு தன்னார்வலர், 20 பேருக்கு எழுத்தறிவு வழங்கி, அந்த நபர்களை தேர்ச்சி பெறச் செய்தால் அவருக்கு சான்றிதழ் வழங்குகிறோம் என்று கூறுவது அரசுக்கு அழகல்ல. கரோனா பொதுமுடக்கத்தால் வருவாயின்றி பலர் சிரமப்படும் நிலையில் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரமாவது மதிப்பூதியம் வழங்க வேண்டும்” என்றார்.
இதுதொடர்பாக விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலகங் களில் விசாரித்தபோது, “அரசு உத்தரவைத் தான் பின்பற்ற முடியும்.இதற்கே பலர் போட்டா போட்டிக் கொண்டு விண்ணப்பம் அளித்துள்ளனர்.
இத்திட்டம் 10 ஆண்டு காலம் என்பதால் எதிர்காலத்தில் ஏதேனும் அரசுப் பணிக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்” என்று தெரிவித்தனர்.