Last Updated : 11 Oct, 2015 10:55 AM

 

Published : 11 Oct 2015 10:55 AM
Last Updated : 11 Oct 2015 10:55 AM

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டிக்காக பொதுமக்களின் கருத்துகளை திரட்டும் பணிகள் தீவிரம்: ஆய்வு செய்யும் நிறுவன அதிகாரி தகவல்

ஸ்மார்ட் சிட்டியை உருவாக்குவதற் காக மத்திய அரசு கேட்டுள்ள 54 கேள்விகளுக்கான பதில்களை தயார் செய்வது மற்றும் பொது மக் களின் கருத்துகளை கேட்பது ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக ஜோன்ஸ் லாங்லாசால் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் 98 நகரங் கள் ஸ்மார்ட் சிட்டிகளாக உருவாக் கப்படும் என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் சென்னை, திருச்சி, தஞ்சாவூர், வேலூர், திருநெல்வேலி உட்பட 12 நகரங்கள் தேர்வாகியுள்ளன. மத்திய அரசு தேர்வு செய்த நகரங்களில் என் னென்ன திட்டங்களை மேற் கொள்ள வேண்டும் என்ற செயல் திட்ட அறிக்கையை உருவாக்கு வதற்கான வேலைகளில் 38 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த பணிகளுக்காக மத்திய அரசு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

இதுபற்றி சென்னை மற்றும் திருச்சியில் ஸ்மார்ட் சிட்டியை உருவாக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள ஜோன்ஸ் லாங்லாசால் நிறுவனத்தின் இந்திய பிரிவு இயக்குநர் ஏ.சங்கர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

சென்னை மற்றும் திருச்சியில் ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்கு வதற்காக கருத்துக்கேட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி பணிகளை மேற் கொள்ள போக்குவரத்து, சுகாதாரம், ஜன நெருக்கடி, தண்ணீர் வசதி, கல்வி நிலை, நகரின் தற்கால நிலை குறித்த 54 கேள்விகளை அந்தந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.

இதில் பொதுமக்களின் பங்களிப் பும் மாநில அரசின் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியமானது. கட் டமைப்பு, வடிவமைப்பு, தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பதில் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு நகரிலும் எந்த பகுதி யில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதை அறிய, மக்களிடம் நகர்ப்புற மேம் பாட்டுத்துறை அமைச்சக இணைய தளத்தில் கருத்து கேட்கப்படுகிறது. நகரங்களில் உள்ள குறைகளை சொல்லாமல், குறைகளுக்கான மாற்று யோசனைகளை பொதுமக் கள் கூறலாம்.

சென்னையில் போக்குவரத்து சார்ந்த மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று பெரும்பாலா னவர்கள் கூறியுள்ளனர். மின்சார ரயில், மெட்ரோ ரயில், பேருந்து போன்றவற்றை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே சென்னை வாசிகளின் விருப்பமாகவுள்ளது. மீதமுள்ள 2 கூட்டங்களை நவம்பர் மற்றும் டிசம்பர் முதல் வாரத்தில் நடத்தவுள்ளோம். அரசுடனும் தொடர்ந்து பேசி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x