Last Updated : 07 Nov, 2020 06:17 PM

 

Published : 07 Nov 2020 06:17 PM
Last Updated : 07 Nov 2020 06:17 PM

காரைக்குடியில் 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

காரைக்குடி பகுதியில் கடத்தல் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக சிவகங்கை குடிமைப் பொருள் பறக்கும்படை வட்டாட்சியர் தமிழரசனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்றுமுன்தினம் இரவு அவரும், துணை வட்டாட்சியர் சேகரும் காரைக்குடி முத்தாலம்மன் கோயில் வடக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனையிட்டனர். அங்கு 250 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து மகர்நோன்பு பொட்டல் அருகில் உள்ள கோழிக்கடை முன்பு பதுக்கி வைத்திருந்த 450 அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவர் மீது அத்தியாவசிப் பொரு்டகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுகுறித்து பறக்கும்படை வட்டாட்சியர் தமிழரசன் கூறுகையில், ‘‘சிவகங்கை மாவட்டம் முழுவதும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடத்தலில் யாரேனும் ஈடுபட்டால் 94434 05803, 98946 54690 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியம் காக்கப்படும்,’’ என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x