பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய முன்னாள் அமைச்சர் ஹண்டே தமிழக ஆளுநருக்கு கடிதம்

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய முன்னாள் அமைச்சர் ஹண்டே தமிழக ஆளுநருக்கு கடிதம்
Updated on
1 min read

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தமிழக முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ள 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி கடந்த 2018 செப்.9-ம் தேதி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு கடந்த3-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது,‘‘7 பேரையும் விடுதலை செய்வதில்ஆளுநர் ஏன் தாமதம் செய்கிறார். பல்நோக்கு விசாரணை கண்காணிப்பு முகமையின் (எம்டிஎம்ஏ) அறிக்கைக்காக காத்திருப்பது வீண்’’ என்று உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

இந்த தருணத்தில் 2 நிகழ்வுகளை கவனத்தில் கொள்வது அவசியம். ராஜீவ்காந்தி கொலையில் தொடர்பு உடைய அனைத்தையும் கண்டறிய 1991-ல் நீதிபதி ஜெயின் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. 1997-ல் காங்கிரஸ் ஆதரவில் ஐ.கே.குஜ்ரால் தலைமையிலான அரசு இருந்தது. அதில் திமுகவும் அங்கம் வகித்தது. ஜெயின் ஆணையம் திமுகவை சம்பந்தப்படுத்தியுள்ளது என்று கூறி, திமுகவை அமைச்சரவையில் இருந்து நீக்க காங்கிரஸ் வலியுறுத்தியது. குஜ்ரால் அதை ஏற்காததால் அவரது அரசு கவிழ்ந்தது.

1998-ல் வெளியான ஜெயின் ஆணைய அறிக்கையின்படி திமுக மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அன்றைய உள்துறை அமைச்சர் அத்வானியை சந்தித்து வலியுறுத்தினர்.

இப்படி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இன்னமும் ஒரு தெளிவான நிலை ஏற்படாமல் உள்ளது. எனவே, தமிழக அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு கடந்த ஜூலை 31-ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in