மத்திய, நகர கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இருந்து நீக்க நீதிமன்றத்தை நாடியுள்ளோம்: செல்லூர் ராஜூ

மத்திய, நகர கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இருந்து நீக்க நீதிமன்றத்தை நாடியுள்ளோம்: செல்லூர் ராஜூ
Updated on
1 min read

கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விழுப்புரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

நெல்லுக்கான ஆதார விலை குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. வெளிச் சந்தையை விட விலை கூடுதலாக கொடுப்பதால்தான் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களை நாடுகின்றனர்.

‘ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வங்கிகள் வர வேண்டும்’ என்பது சட்டம். அதன்படி, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளன. கூட்டுறவு சட்டத்துக்கு எதிராக இது உள்ளதால் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.

மழையின் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயம் வருவது தாமதமாகிறது. தேசிய உற்பத்தி கழகத்தில் 316 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ‘டிவிடெண்ட்’ கொடுப்பது அந்தந்த சங்க நிர்வாகத்தின் உரிமை. அரசுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in