

கமல் அமைப்பது மூன்றாவது அணி அல்ல; மூன்றாம் பிறை என கார்த்தி சிதம்பரம் எம்பி தெரிவித்தார்.
கரோனா ஊரடங்கால் பாதிக் கப்பட்ட 160 இசை, நாடக, நடனக் கலைஞர்கள் குடும்பத்தி னருக்கான நிவாரண உதவிகள் வழங்கும் விழா காரைக்குடியில் நடந்தது.
நவீன எரிவாயு தகனமேடை அறக்கட்டளைப் பொருளாளர் கண்ணப்பன் தலைமை வகித்தார். செயலர் சாமி.திராவிடமணி வர வேற்றார். கார்த்தி சிதம்பரம் எம்பி, மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
இந்த நிவாரணப் பொருட்களில் அரிசி, மளிகைப் பொருட்களை எரிவாயு தகனமேடை அறக் கட்டளையினரும், வேட்டி, சட்டை, சேலைகளை திரைப்படத் தயாரிப்பாளர் கே.ஏ.சாய்சிதம் பரமும் நன்கொடையாக வழங் கினர். நிகழ்ச்சிக்குப் பின் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பாஜகவுக்கும், முருகனுக்கும் எவ்வித சம்பந் தமும் இல்லை. பாஜக தலைவர் முருகனுக்கு நிஜ கடவுளான முருகனை பற்றிய சுலோகம் தெரியுமா? வேல் யாத்திரை முழுக்க முழுக்க அரசி யலுக்காகச் செய்யப்படும் ஒன்று.
பாஜக கூட்டணியை அதிமுக விரும்பாவிட்டாலும் பாஜகவினர் விடுவதாக இல்லை. கமல் அமைப்பது மூன்றாவது அணி யல்ல; மூன்றாம் பிறை என்றார்.