

ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பிறந்த தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழக அரசு இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடியது.
ராமேசுவரம் பேக்கரும்பில் கலாமின் நினைவிடத்தில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், இளைஞர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், மனைவி பிரேமலதாவுடன் கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கலாம் பிறந்த நாளான இன்று அவரது உடல் அடக்கம் செய்யப் பட்ட இடத்தில் முதல்வர் ஜெய லலிதா அஞ்சலி செலுத்தி இருக் கலாம். ஹெலிகாப்டரில் கோடநாடு சென்ற அவர், கலாம் பிறந்த நாளான இன்று ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த செல்லவில்லை. அது ஏன் என்று தெரியவில்லை. மேலும் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது என்றார்.
கலாமின் பிறந்த நாளான அக்.15-ஐ மாணவர் தினமாகக் கொண்டாடும் வகையில் தேமுதிக சார்பில் ராமேசுவரத்தில் மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகளை விஜயகாந்த் வழங் கினார்.
குடந்தையில் ஸ்டாலின்
தஞ்சை மாவட்டத்தில் நேற்று விடியல் மீட்பு பயணம் மேற்கொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கும்பகோணத்தில் தனியார் திருமண மண்டபத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளைச் சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது, அங்கு வைக் கப்பட்டிருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.