

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமத மாகத் தொடங்கியது. ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இம்மூன்று மாவட்டங் களிலும் சராசரி அளவுகூட மழைபெய்யவில்லை. மாறாக வெயில் சுட்டெரித்தது. எனினும், தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால், அணைகளின் நீர்மட்டம் திருப்திகரமாக உள்ளது.
அக்டோபர் 28-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகும், எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. `இப்பகுதியில் நவம்பர், 4, 5 மற்றும் 6-ம் தேதிகளில் கனமழை பெய்யும்’ என, வானிலை மையம் அறிவித்தது. ஆனாலும், பெரும்பாலான இடங்களில் மழைக்கான அறிகுறியே இல்லை.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கருப்பாநதி அணைப்பகுதியில் 14 மிமீ மழை பதிவானது. ராமநதி அணையில் 12, சிவகிரியில் 10, தென்காசியில் 6.40, சங்கரன் கோவிலில் 6, ஆய்க்குடியில் 1.20, கடனாநதி அணையில் 1 மிமீ மழை பதிவானது.
கடனாநதி அணையில் நீர் மட்டம் 68.60 அடியாகவும், ராமநதியில் அணை 63.50, கருப்பாநதி அணையில் 58.88, குண்டாறு அணையில் 36.10, அடவிநயினார் அணையில் 101 அடியாகவும் இருந்தது. அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதாலும், பல குளங்கள் நீரின்றி வறண்டு கிடப்பதாலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் சில பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. அதிகபட்சமாக எட்டயபுரத்தில் 67 மிமீ மழை பதிவாகியுள்ளது. விளாத்திகுளம் 31, காடல்குடி 10, சூரங்குடி 1, கோவில்பட்டி 25, கழுகுமலை 13, கயத்தாறு 39, கடம்பூர் 13, ஓட்டப்பிடாரம் 16, வேடநத்தம் 10, கீழஅரசரடி 5, எட்டயபுரம் 67, ஸ்ரீவைகுண்டம் 9.5, தூத்துக் குடி 30.2 மிமீ மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். வடகிழ க்கு பருவமழையை எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கி ன்றனர்.
பாபநாசம் அணை
பாபநாசம் அணைப்பகுதியில் நேற்று காலை நிலவரப்படி 18 மி.மீ. மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணைப் பகுதியில் 1 மிமீ, நம்பியாறு அணைப்பகுதியில் 8 மிமீ, சேரன்மகாதேவியில் 1, நாங்குநேரியில் 5 மிமீ மழை பதிவாகியிருந்தது. பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று காலையில் 104.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 383 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,403 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 75.67 அடியாக இருந்தது. அணைக்கு 25 கனஅடி தண்ணீர் வருகிறது. 35 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
சேர்வலாறு நீர்மட்டம் 102.03 அடியாகவும், வடக்கு பச்சையாறு நீர்மட்டம் 10.25 அடியாகவும், நம்பியாறு நீர்மட்டம் 8.46 அடியாகவும், கொடுமுடியாறு நீர்மட்டம் 30 அடியாகவும் இருந் தது. 26 கனஅடி தண்ணீர் வருகிறது. 40 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
விவசாயிகள் வேதனை
தென்மாவட்டங்களில் நேற்று மதியத்துக்குப் பின்பு மேகங்கள் சூழ்ந்து, மழைக்கான அறிகுறி தென்பட்டது. ஆனாலும், மழை யில்லை. தென்மேற்கு பருவமழை தாமதமாக பெய்ததால், ஜூன், ஜூலை மாதங்களில் விவசாயிகள் நெல் பயிரிடவில்லை. தாமதமாக நெல் பயிரிட்டால், வடகிழக்கு பருவமழையின் போது, பயிர் வீணாகிவிடும் என அஞ்சினர். தற்போது, வடகிழக்கு பருவமழையும் பிந்துவதால், இப்பருவத்திலும் நெல் பயிரிடும் பரப்பளவு வெகுவாக குறைந்து ள்ளது. இதனால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.