Published : 06 Nov 2020 03:18 AM
Last Updated : 06 Nov 2020 03:18 AM

திருப்பத்தூர் அருகே கி.பி. 11-ம் நூற்றாண்டை சேர்ந்த வீர ராஜேந்திர சோழனின் கல்வெட்டு கண்டெடுப்பு

திருப்பத்தூர் அருகே கி.பி.11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘வீர ராஜேந்திர சோழனின்’ வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியைச் சேர்ந்த தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு, வரலாறு மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் முனைவர் சேகர், ஆய்வு மாணவர்களான சரவணன், தரணிதரன் ஆகியோர் திருப்பத்தூர் அடுத்த சந்திரபுரம் கிராமத்தில் நடத்திய கள ஆய்வில் கி.பி.11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வீர ராரஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டினை கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு கூறும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள ஆய்வு நடத்தி வரலாற்று சிறப்பு மிக்க தொல்லியல் தடயங் களை கண்டறிந்து ஆவணப் படுத்தியுள்ளோம்.

இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த சந்திரபுரம் கிராமத்தில் கள ஆய்வு நடத்தியபோது, அங்குள்ள ஏரிக்கோடி என்ற இடத்தில் விவசாயி ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நடுகற்கள் இருப்பதை கண்டறிந்து அவற்றை ஆய்வு செய்ய தொடங்கினோம்.

அப்போது, அங்கு பெரிய கல்வெட்டு ஒன்று இருந்தது. உடைந்த நிலையில் 5 துண்டுகளாக வெவ்வேறு இடங்களில் இருந்த கல்வெட்டை ஒன்றிணைத்து ஆய்வு செய்தோம். 4 அடி அகலமும், 5 அடி உயரமும் கொண்ட அந்த கல்வெட்டில் 21 வரிகள் பொறிக் கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வரியும் அடிக்கோடிட்டு மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டை மாவுப்பூச்சு மூலம் படி எடுத்து வாசித்தோம். அதில், ‘வீர ராஜேந்திர சோழனின்’ ‘வீரமே துணையாக’ என்ற தொடங் கும் மெய்க்கீர்த்தி சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. கூடல் சங்கமம் என்ற இடத்தில் ஆகவமல்லன் என்ற சாளுக்கிய மன்னனை போரில் வென்று அவனு டைய மனைவியர், சொத்துக்கள், வாகனங்கள் ஆகியவற்றை கைப் பற்றிய செய்தியும், விக்கலன், சிங்கணனை வென்ற செய்தியும், வேங்கை நாட்டை கைப்பற்றி தனது முன்னோர்கள் நினைத்ததை நிகழ்த்தி முடித்ததை வீர ராஜேந்திர சோழனின் இந்த மெய்க்கீர்த்தி விவரிக்கிறது.

இக்கல்வெட்டானது வீர ராஜேந் திர சோழனின் 7-வது ஆட்சி ஆண்டில் அதாவது கி.பி.1070-ல் பொறிக்கப்பட்டதாகும். கல்வெட் டில் இந்த ஊர் சந்திரபுரம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊரில் விஜயராஜேந்திர மண்டலத்தில் தகடூர் (தற்போது தருமபுரி) மாவட்டத்தில் இருந்துள்ளது.

இந்த ஊரின் 4 வேதமறிந்த பிராமணர்களுக்கு ‘சந்திரபுரமான அருமொழித்தேவ சதுர் வேதிமங் கலம்’ என வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊரின் தலைவன் ‘முதலி துக்கையன் பள்ளிகொண்டான்’ என்பவன் அளித்த தர்மத்தையும் இக்கல்வெட்டு குறிக்கிறது. வீரராஜேந்திர சோழனின் சேனாதி பதி மாவலி மும்முடிச்சோழ தேசத்து புறமலை நாட்டின் மீது போர் தொடுக்க வந்த போது உயிரிழந்ததாக தெரிகிறது.

அந்த மன்னனை சிறப்பிக்க இந்த ஊரில் இருந்து ஏரிக்கு ‘ராஜேந்திர சோழன் ஏரி’ என்ற பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x