வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி; 10 மாவட்டங்களில் கனமழை; ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி; 10 மாவட்டங்களில் கனமழை; ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
Updated on
2 min read

குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கைப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கைப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

அடுத்த 48 (06.11.2020) மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

அடுத்த 72 (07.11.2020) மணி நேரத்தில் தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

தாராபுரம் (திருப்பூர்) 17 செ.மீ., பிளவக்கல் (விருதுநகர்) 16 செ.மீ., மூலனுர் (திருப்பூர்) 13 செ.மீ., ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்) 12 செ.மீ., உசிலம்பட்டி (மதுரை) 11 செ.மீ., வத்திராயிருப்பு (விருதுநகர்), குன்னூர் (நீலகிரி), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு) தலா 9 செ.மீ., ஆலந்தூர் (சென்னை) 8 செ.மீ., ராஜபாளையம் (விருதுநகர்), டிஜிபி அலுவலகம் (சென்னை), எட்டயபுரம் (தூத்துக்குடி) , போடிநாய்க்கனுர் (தேனி) தலா 7செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in