காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்கள்
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்கள்
Updated on
1 min read

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால் கூட்டுறவு ரேஷன் கடை ஊழியர் சங்கத்தின் சார்பில் இன்று (நவ. 5) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் ரஹ்மத் பாஷா, போராட்டக்குழு தலைவர் மனோகர் ஆகியோர் தலைமை வகித்தனர்.

"காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 70 கூட்டுறவு ரேஷன் கடைகளில் 120 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்குக் கடந்த 38 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டும், பல முறை உயரதிகாரிகளிடம் பேசியும் எவ்வித தீர்வும் ஏற்படவில்லை.

இந்நிலையில், ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்தும், புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவித்தும், உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும், ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் அல்லது ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய நிதிப் பலன்களை வழங்க வேண்டும், ஊதியமின்றி குடும்பத்தை நடத்த இயலாமல் உயிரிந்த ஊழியர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தங்களது ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை சாலையில் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரேஷன் கடை ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in