நோயாளிகளின் பிரச்சினைகளை தீர்க்க கிண்டி கரோனா மருத்துவமனையில் மனநல ஆலோசனை மையம்

சென்னை கிண்டி அரசு கரோனா மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மனநல ஆலோசனை மையத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவருக்கு ஆலோசனை வழங்கும் மருத்துவர்கள்.
சென்னை கிண்டி அரசு கரோனா மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மனநல ஆலோசனை மையத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவருக்கு ஆலோசனை வழங்கும் மருத்துவர்கள்.
Updated on
1 min read

தமிழகத்தில் முதல்முறையாக சென்னை கிண்டி அரசு கரோனாமருத்துவமனையில் மனநல ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் அமைக்கப்பட்ட தேசிய முதியோர் நல மருத்துவ மையம், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய கரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் கரோனா தொற்று நோயாளிகளுக்கு, வழக்கமான சிகிச்சைகளுடன் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை, நுரையீரல் செயல் திறனை அதிகரிக்க பலூன்களை ஊதும் தெரபி, மனஅழுத்தத்தைப் போக்க மியூசிக்கல் தெரபிஎன பல்வேறு சிகிச்சைகள் கொடுக்கப்படுகின்றன. நூலகமும் செயல்படுகிறது.

இந்நிலையில், மருத்துவமனையில் புதிதாக மனநல ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக மருத்துவமனை இயக்குநர் கே.நாராயணசாமியிடம் கேட்டபோது, “கரோனாதொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் திடீரென்று குடும்பத்தினரிடம்இருந்து தனிமைப்படுத்தப்படுகின்றனர். தனிமை, சிகிச்சை, தொற்றால் ஏற்பட்ட அச்சம் போன்றவற்றால் மனதளவில் தடுமாற்றம் ஏற்படுகிறது. அதிகமாக கவலைப்படுகின்றனர். தூக்கம் வராமல் அவதிப்படுகின்றனர்.

அவர்களுக்கு சிகிச்சைகளுடன் மனநல ஆலோசனை தேவைப்படுகிறது. அதனால், முதல் முறையாக கரோனா மருத்துவமனையில் மனநல ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மையத்தில் உள்ள மனநல மருத்துவர்கள் அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in