பத்திரிகை தகவல் அலுவலக தென் மண்டல கூடுதல் தலைமை இயக்குநர் பொறுப்பேற்பு

எம்.அண்ணாதுரை
எம்.அண்ணாதுரை
Updated on
1 min read

சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராக எம்.அண்ணாதுரை நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்திய தகவல் பணி அதிகாரியான அண்ணாதுரை, இதற்கு முன்பு சென்னை பொதிகை தொலைக்காட்சி செய்திப் பிரிவு இயக்குநர், மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ளார். நிதி, சட்டம், செய்தி ஒலிபரப்பு, ஜவுளித் துறைகளில் அமைச்சர்களின் தனிச் செயலாளராகவும் சிறப்புப் பணி அலுவலராகவும் பணியாற்றி உள்ளார். அண்ணாதுரை, 1995-ம் ஆண்டு குடிமைப் பணியாளர் தேர்வில் வெற்றி பெற்று இந்திய தகவல் பணியில் சேர்ந்தார்.

பத்திரிகை தகவல் அலுவலகம் இச் செய்தியை தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in