தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சென்னை ஏற்றுமதி வளாக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தாம்பரம் மெப்ஸ்-ல் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்யக் கோரியும், பிடித்தம் செய்த சம்பளத்தை திரும்ப தரக் கோரியும் தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..படம்: எம்.முத்துகணேஷ்
தாம்பரம் மெப்ஸ்-ல் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்யக் கோரியும், பிடித்தம் செய்த சம்பளத்தை திரும்ப தரக் கோரியும் தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..படம்: எம்.முத்துகணேஷ்
Updated on
1 min read

தொழிலாளர்களுக்கு விரோதமாகச் செயல்படுவதாக கூறி சிலதொழில் நிறுவனங்களை கண்டித்து, சென்னை ஏற்றுமதி வளாக ஊழியர்கள் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில் தாம்பரம் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

மெப்ஸ் வளாகத்தில் செயல்படும் வெஞ்ச்சா லைட்டில் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவையை வழங்க வேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட 43 தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும், மெப்ஸ் வளாகத்தில் செயல்படும் பிஎம்ஐ இன்ஜினீயரிங் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும், வேங்கைவாசலில் செயல்படும் காளிஸ்வரீ ரீபைண்ட் நிறுவனத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 26 தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும், மறைமலை நகரில் செயல்படும் ஸ்ரீதர் கம்யூனிகேஷன் நிறுவன தொழிலாளர்களுக்கான தொழிலாளர் வைப்பு நிதியை உடனடியாக செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றுசென்னை ஏற்றுமதி வளாக ஊழியர்கள் மற்றும் பொதுத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்புகோட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு மாநில நிர்வாகியும் மெப்ஸ் சங்க தலைவருமான பொன்முடி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மெப்ஸ் சங்க பொதுச் செயலர் சாதிக்பாஷா, பொருளர் ஜெயந்தி, துணை தலைவர்கள் மகேஷ்வரன், முத்தையா, கிருஷ்ணமூர்த்தி மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in