முத்துராமலிங்கத் தேவர் நினைவு இல்லம் அமைக்க ஆலோசனை: பா.பிளாக் கட்சிகளிடையே வாக்குவாதம்

திருநகரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பார்வர்டு பிளாக் கட்சிகளின் நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்.
திருநகரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பார்வர்டு பிளாக் கட்சிகளின் நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்.
Updated on
1 min read

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு திருநகரில் நினைவு இல்லம் அமைப்பது குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பார்வர்டு பிளாக் கட்சிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மதுரை அருகே திருநகரில் தேவர் வாழ்ந்த இல்லத்தை, நினைவு இல்லமாக்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில், அகில இந்திய பா.பிளாக் மாநில பொதுச்செயலாளர் பி.வி. கதிரவன், பாரதிய பா.பிளாக் கட்சியின் தலைவர் முருகன் மற்றும் பசும்பொன் தேவர் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப் புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பின்னர் கதிரவன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், ‘திருநகரில் தேவர் நினைவு இல்லம் அமைக்க 2005-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்தார். ஆனால், நினைவு இல்லம் அமைக்கப்படவில்லை. இதற்குக் காரணமான பள்ளி முன் நவ.9-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும், 2021-ம் ஆண்டு தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தவுடன் மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவரின் பெயரை ஸ்டாலின் சூட்டுவார். இதற்காக அதிமுக-பாஜக கூட்டணி எந்த முயற்சியும் எடுக்கவில்லை’ என் றார். கதிரவன் பேச்சுக்கு முருகன்ஜி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் பங்கேற்றோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை யடுத்து கதிரவன் கூட்டத்திலி ருந்து வெளியேறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் முருகன்ஜி கூறுகையில், ‘பசும் பொன்னில் நடந்த தேவர் ஜெயந் தியின்போது மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட திருநீரை அவமதித்தார். அவர் எப்படி மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயரைச் சூட்டுவார்’ என்றார். அப்போது முருகன்ஜியை எதிர்த்து சிலர் கோஷமிட்டனர். மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அங்கு திருநகர் போலீஸார் வந்ததும் அனைவரும் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in