

தமிழகத்தில் கேபிள் டிவி கார்ப்பரேஷன் மேலாண் இயக்குனர் உட்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:
1.வெளிநாட்டிலிருந்து பயிற்சி முடிந்து நாடு திரும்பிய ஹர் சஹாய் மீனா நிர்வாகச் சீர்திருத்தத்துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. பேறுகால விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பியுள்ள பத்மஜா பெரம்பலூர் மாவட்டத் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. முதல்வர் தனிப்பிரிவு சிறப்புச் செயலர் பாஸ்கர பாண்டியன் மாற்றப்பட்டு பொதுமக்கள் தொடர்பு மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை துணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதலாக அரசு கேபிள் டிவி மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. டாமின் மேலாண் இயக்குனர் சரவணவேல்ராஜ் முதல்வர் தனிப்பிரிவுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5.கூட்டுறவுச் சங்கப் பதிவாளர் எல்.சுப்ரமணியன் டாமின் மேலாண் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறு தலைமைச் செயலர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.