Published : 09 Oct 2015 10:22 AM
Last Updated : 09 Oct 2015 10:22 AM

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்: 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடுவது தொகுப்பூதிய கால பணியை வரன்முறைப் படுத்துதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மாநிலம் தழுவிய ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகள், நடு நிலைப் பள்ளிகளில் 5,777 ஆசிரியர் கள் பணிபுரிகின்றனர். இதில், வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது 1,862 ஆசிரியர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்திருந்தனர். 3,845 ஆசிரியர்கள் வேலை நிறுத் தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதனால், மாவட்ட தொடக்க கல்வி நிர்வாகம், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு மைய பணியாளர்களை பள்ளிகளில் அமர்த்தியது. ஆசிரியர் பணியில் சேர்ந்து ஓராண்டு மட்டுமே நிறைவு செய்த ஆசிரியர்கள் மற்றும் பணி ஓய்வுபெறும் ஆண்டில் உள்ள ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்காமல் பணிக்கு வந்தனர்.

இதனால், பள்ளி வந்த மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படவில்லை. பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் பிள்ளை களை பள்ளிக்கு அனுப்பிய பெற் றோர், சிறிது நேரத்தில் அவர் களை திரும்ப அழைத்து சென்ற சம்பவங்களும் நடந்தன. சில இடங்களில் பூட்டிய வகுப்பறை கட்டிடங்களின் முன்பு மாணவர்கள் விளையாடி பொழுதை கழித்தனர்.

மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றிய தொடக்க கல்வி அலுவலகங்கள் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறும்போது, ‘வழக் கம்போல் பள்ளிகள் செயல்படு வது போன்று சித்தரிப்பதற்காக உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரி யர்களை கொண்டு பள்ளிகளை திறக்க செய்துள்ளனர்’ என்றனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா கூறும்போது, ‘உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 15 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு வரவில்லை. இதனால் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டன’ என்றார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட தொடக்க கல்வி வட்டா ரங்கள் கூறியதாவது: பகுதி நேர ஆசிரியர்கள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்களை கொண்டு பள்ளிகளை நடத்தியதால் அவை வழக்கம் போல் இயங்கின.

பணிக்கு வராத ஆசிரியர் களுக்கு, அன்றைய தினம் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பணிக்கு வராத ஆசிரியர்களின் பெயர் பட்டியலை தயாரித்து தொடக்க கல்வி இயக்குநரகத் துக்கு அனுப்பும்படி உத்தரவிடப் பட்டுள்ளது. அதனால், பெயர் பட்டியல்களை சரிபார்த்து வருகி றோம் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

திருவள்ளூர்

திருவள்ளூர், பொன்னேரி ஆகிய இரு கல்வி மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 1, 614 பள்ளிகள் உள்ளன. இவற்றில் பணியாற்றும் 10,438 ஆசிரியர்களில் 4,616 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

பெரும்பாலான பள்ளிகள், குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரி யர்கள், சத்துணவு அமைப் பாளர்கள், அலுவலக உதவியாளர் களைக் கொண்டு நடத்தப்பட்டன. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் வழக்கம் போல் இயங் கியதாக மாவட்ட கல்வி துறை தெரிவித்தது.

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x