Published : 24 Oct 2015 07:33 AM
Last Updated : 24 Oct 2015 07:33 AM

‘தி இந்து’ நடத்தும் விளையாட்டுப் போட்டி: வெற்றி பெறும் 5 மாணவர்கள் நாசாவுக்கு செல்லலாம்

மாணவர்களுக்காக ‘தி இந்து’ நடத்தும் இணையதள விளையாட் டுப் போட்டியில் வெற்றி பெறும் 5 பேர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர்.

‘தி இந்து’ இன் ஸ்கூல் மற்றும் எட்சிக்ஸ் ப்ரெயின் லேப் ஸ்கில் ஏஞ்சல் இணைந்து ‘சூப்பர் ப்ரெயின் சாலேஞ்ச் 2015’ என்ற இணையதள விளையாட்டுப் போட்டியை நடத்து கின்றன. மூளையின் செயல்பாடு களையும் திறமைகளையும் சோதித் துப் பார்க்கும் இந்தப் போட்டி யில் 5 விளையாட்டுகள் உள்ளன. நினைவுத்திறன், காட்சிப்படுத்தும் செயல்பாடு, கவனம், பிரச்சினை களுக்கு தீர்வு கண்டுபிடிப்பது மற்றும் மொழித் திறன்கள் சோதிக்கப்படும்.

போட்டியாளர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் விளையாட்டை முடித் திருக்க வேண்டும். >www.skillangels.com என்ற இணையதளத்தில் உள்ள மாதிரிப் போட்டிகளை மாண வர்கள் விளையாடிப் பார்க்கலாம். சரியான விடை, மற்றும் விடை யளிப்பதற்கான நேரம் ஆகிய வற்றை பொருத்து மதிப்பெண்கள் அளிக்கப்படும். ஒவ்வொரு விளையாட்டில் வெற்றி பெறு பவர்களுக்கும் அனைத்து போட்டி களிலும் வெற்றி பெறுபவர் களுக்கும் பரிசுகள் வழங்கப்படும். வாஷிங்டன் நகரத்தில் உள்ள அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசாவுக்கு செல்ல 5 பங்கேற்பாளர்களுக்கும், சிங்கப் பூரில் உள்ள யுனிவர்செல் ஸ்டுடியோஸ் செல்ல 3 பங்கேற் பாளர்களுக்கும் வாய்ப்பு வழங் கப்படும். மேலும் 7ஆயிரம் பரிசுகள் போட்டியாளர்களுக்காக காத்திருக்கின்றன.

மாணவர்கள் இப்போட்டிக்காக பதிவு செய்வதற்கான படிவத்தை அக்டோபர் 1-ம் தேதி முதல் நவம்பர் 22-ம் தேதி வரை நேரடியாகவோ, >www.skillangels.com அல்லது >www.superbrainchallenge.com என்ற இணையதளங்களிலோ சமர்ப்பிக்கலாம். பதிவு கட்டணம் ரூ.350 ஆகும்.

குறிப்பிட்ட நேரப் பிரிவின் போது மட்டுமே மாணவர்கள் போட்டியில் கலந்துகொள்ள முடியும். விளை யாட்டுப் போட்டிக்கான மென் பொருள் மடிக்கணினி, கணினி ஆகியவற்றுக்காக வடிவமைக் கப்பட்டுள்ளது. இது குறித்த பிற தொழில்நுட்ப தகவல்களை இணையதளத்தில் பெறலாம்.

போட்டியில் 5 விளையாட்டுகள் உள்ளன. நினைவுத்திறன், காட்சிப்படுத்தும் செயல்பாடு, கவனம், பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுபிடிப்பது மற்றும் மொழித் திறன்கள் சோதிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x