Published : 04 Nov 2020 01:45 PM
Last Updated : 04 Nov 2020 01:45 PM

திருநெல்வேலி மாவட்ட திமுக  4 ஆகப் பிரிப்பு; பொறுப்பாளர் நியமனம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை

திருநெல்வேலி மாவட்ட திமுக, நிர்வாக வசதிக்காக 4 ஆகப் பிரிக்கப்படுவதாகவும், அதற்குரிய மாவட்டப் பொறுப்பாளர்களையும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் தற்போது திருநெல்வேலி, தென்காசி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து திமுகவிலும் கட்சியின் நிர்வாக வசதிக்காக மாவட்டங்களைப் பிரித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னர் ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் 3 மாவட்டங்களாக கிழக்கு, மேற்கு, மத்தியப் பகுதி என இருந்ததை மாற்றி தற்போது திருநெல்வேலி, தென்காசி என நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

“திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு, திருநெல்வேலி மத்தியப் பகுதி ஆகிய மாவட்டங்கள், கட்சி நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்தியப் பகுதி, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு என நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றன.

1.திருநெல்வேலி கிழக்கு , 2.திருநெல்வேலி மத்தியப் பகுதி, 3. தென்காசி வடக்கு, 4.தென்காசி தெற்கு ஆகிய 4 மாவட்டங்களில் அடங்கியுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் விவரம்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம்

1. அம்பாசமுத்திரம்
2. நாங்குனேரி
3. ராதாபுரம்

பொறுப்பாளர் ஆவுடையப்பன்

திருநெல்வேலி மத்திய மாவட்டம்

1. திருநெல்வேலி
2. பாளையங்கோட்டை

பொறுப்பாளர் அப்துல் வஹாப்

தென்காசி வடக்கு மாவட்டம்

1. வாசுதேவநல்லூர் (தனி)
2. கடையநல்லூர்

பொறுப்பாளர் ஆ.துரை

தென்காசி தெற்கு மாவட்டம்

1. சங்கரன்கோவில் (தனி)
2. தென்காசி
3. ஆலங்குளம்

பொறுப்பாளர் சிவபத்மநாதன்

என நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன”.

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x