

ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக அந்த சங்கத்தின் செயலாளர் ஏ.அன்பழகன், தலைவர் எ.பாண்டியன் ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
எங்கள் சங்க உறுப்பினர்கள் மூலம் சுமார் ஆயிரம் ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்படுகின்றன. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தில் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் சிறப்புக் கட்டணம் வசூலிப் பதில்லை என்றும் வழக்கமான கட்டணத்தி லேயே பேருந்துகளை இயக்குவது என்றும் முடிவு செய்துள்ளோம்.
எங்கள் சங்கத்தின்கீழ் இயங்கும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் பயணிகள் புகார் கொடுக்கலாம். மற்ற மாநிலங் களில் வழங்குவதுபோல், தமிழகத்தில் சிலீப் பர் வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு அதிக அளவில் அனுமதி வழங்க வேண்டும்.
பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் குற்றங்களை தடுக்கவும் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வோர் அடை யாள அட்டையை காட்ட வேண்டும் என அறி வுறுத்தி வருகிறோம். மேலும், பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி வருகிறோம்.
சென்னை, கோவை, நாகர்கோவில், மதுரை, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆம்னி பேருந்து நிலையங்கள் உள்ளன. ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசே கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். இது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமை யாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.