

மக்கள் நலன் காக்கும் கூட்டியக் கத்தின் தேர்தல் அணுகுமுறை குறித்து நவம்பர் 2-ம் தேதி அறிவிக்கப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
மக்கள் நலன் காக்கும் கூட்டி யக்க தலைவர்களின் ஆலோ சனைக் கூட்டம் சென்னை தியாக ராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் மதிமுக பொதுச் செய லாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலாளர் சுப்பராயன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டியக்கத்தின் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் வரைவு அறிக்கை நேற்று மாலை வெளியிடப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத் துக்குப் பிறகு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:
ஹரியாணா மாநிலத்தில் தலித் வீட்டுக்கு தீ வைத்ததில் 2 குழந்தை கள் உடல் கருகி பலியாகியுள்ளனர். “நாய் மீது சிலர் கல்லெறிந்தால் அதற்கு அரசு பொறுப்பாகுமா” என்று மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கூறி யுள்ளார். இதனை பிரதமர் மோடி கண்டிக்கவில்லை. தலித், சிறு பான்மையினர், சிந்தனைவாதி களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் சார்பில் திருச்சியில் வரும் 31-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.
மேலும் மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்தின் குறைந்தபட்ச செயல் திட்டத்தை மதிமுக தலைமை அலுவலகமான தாய கத்தில் நவம்பர் 2-ம் தேதி வெளியிடவுள்ளோம். எங்கள் கூட்டியக்கத்தில் வேறு சில கட்சிகள் இடம்பெறுவது, தேர் தல் நிலைப்பாடு உள்ளிட்ட விவரங்களை வரும் நவம்பர் 2-ம் தேதி அறிவிப்போம்.
மேலும், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வரும் நவம்பர் 3-ம் தேதி கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தவுள்ளோம். எங் களின் குறைந்தபட்ச செயல் திட்ட அறிக்கையின் விளக்கப் பொதுக் கூட்டம் கோவையில் வரும் 25-ம் தேதி (நாளை) நடக்கவுள்ளது.
இவ்வாறு வைகோ கூறினார்.