Published : 31 Oct 2015 11:11 AM
Last Updated : 31 Oct 2015 11:11 AM

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் டெங்கு அச்சம்: கொசுக்கடியால் இரவில் தூக்கத்தை இழந்த நோயாளிகள்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் கொசுக்கடியால் நோயாளிகள் இரவில் தூக்கத்தை இழந்து கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகி உள்ளனர். பகலில் கடிக்கும் கொசுவால் டெங்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

அரசு ராஜாஜி மருத்துவமனை யில் 2,626 படுக்கைகள் உள்ளன. இங்கு மதுரை மட்டும் இல்லாது தென்மாவட்டங்களில் இருந்து தினமும் 2,800 உள் நோயாளிகள், 9,000 வெளி நோயாளிகள் சிகிச் சைக்கு வருகின்றனர். மருத்து வமனையில், கடந்த ஒரு மாதமாக எப்போதும் இல்லாத வகையில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது.

இரவு மட்டுமில்லாது, பகலிலும் ‘ஈ’க்கள் மொய்ப்பது போல கொசுக்கள் கூட்டமாக வந்து கடிக்கின்றன. உள்நோயாளிகள் இரவில் கொசுக் கடியால் தூக் கத்தை இழந்து மன அழுத்தத்துக்கு ஆளாகி தவிப்பதால் உடல்நிலை மேலும் மோசமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. பகலில் கடிக்கும் கொசு மூலமே டெங்கு பரவுகிறது. அரசு மருத்துவமனையில் பகலிலும் கொசுக்கள் கடிப்பதால் நோயா ளிகள், உறவினர்கள் மத்தியில் டெங்கு காய்ச்சல் குறித்த அச்சம் பரவியுள்ளது.

மருத்துவமனைக்கு டெங்கு, மூளைக்காய்ச்சல், மலேரியா, யானைக் கால் நோயாளிகள் வரும் பட்சத்தில் அவர்களை கடிக்கும் கொசுக்கள் மூலம் அந்த நோய்கள் மற்றவர்களுக்கும் பரவும் வாய்ப் புள்ளது. கொசுக்களின் உற்பத் தியைத் தடுக்கவும், கொசுக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்கவும் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து நோயாளிகள் சிலர் கூறுகையில், நோய்க்கு சிகிச்சைப் பெற மருத்துவமனைக்கு வருகி றோம். ஆனால், இங்கு கடிக்கும் கொசுக்களால் மற்ற நோய்கள் வந்துவிடுமோ என அச்சமாக உள்ளது என்றனர்.

மாநகராட்சிதான் காரணம்

இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் வீரசேகரனிடம் கேட்டபோது, மருத்துவமனையில் அவுட் சோர்ஸிங் மூலம் 321 துப்புரவுத் தொழிலாளர்கள் மூன்று சிப்ட்களில் 24 மணி நேரமும் பணிபுரிகின்றனர். அவர்கள் காலை, பகல், மாலை, இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகம், வார்டுகளில் கொசு மருந்து அடிக்கின்றனர். மருத்துவமனை வளாகம் மிகவும் சுத்தமாக இருக் கிறது. அதனால், இங்கு கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்பே இல்லை. மருத்துவமனை எதிரே பனகல் சாலை கால்வாயில் கழிவுநீர் பல மாதங்களாகத் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட் டுள்ளது. அங்கு உற்பத்தியாகும் கொசுக்கள்தான் மருத்துவ மனைக்கு வருகிறது. மாநகராட்சியிடம் கடிதம் மூலம், அந்த கால் வாயை தூர்வார ஏற்கெனவே புகார் செய்துவிட்டோம் என்றனர்.

மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரியிடம் கேட்டபோது, கால்வாயைத் தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x