அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் 2023-க்குள் குழாய் மூலம் குடிநீர்: ஜல்ஜீவன் திட்ட கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி உறுதி

அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் 2023-க்குள் குழாய் மூலம் குடிநீர்: ஜல்ஜீவன் திட்ட கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி உறுதி
Updated on
1 min read

ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக் கும் 100 சதவீதம் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

மத்திய ஜல்சக்தித் துறை சார்பில் 2024-ம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்க ஜல்ஜீவன் மிஷன் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்கீழ், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களுடனான ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. டெல்லியில்இருந்து மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் பங்கேற்றார். கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று தமிழகத்தின் சார்பில் மேற் கொள்ளப்பட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள 79 ஆயிரத்து 395 ஊரக குடியிருப்பு களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 36 மாவட்டங்களில் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங் களில், 12,525 ஊராட்சிகளில், 79,395 கிராமப்புற குடியிருப்புகள் உள்ளன. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி வரை 1 கோடியே 26 லட்சத்து 89 ஆயிரம் வீடுகளில், 21 லட்சத்து 92 ஆயிரம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 லட்சத்து 4 ஆயிரத்து 97 ஆயிரம் வீடுகளில், 40 லட்சம் வீடுகளுக்கு இந்த 2020-21-ம் ஆண்டிலும், 35 லட்சம் வீடு களுக்கு 2021-22-ம் ஆண்டிலும் மற்றுமுள்ள 30 லட்சம் வீடுகளுக்கு 2022-23-ம் ஆண்டி லும், குழாய் மூலம் குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2024-ம்ஆண்டுக்கு ஓராண்டு முன்னதா கவே தமிழகத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் நிறைவேற்றப்படும்.

நடப்பாண்டில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.921 கோடி அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 2023 மார்ச் மாதத்துக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் 100 சதவீதம் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்க தேவையான அனைத்து நடவடிக்கை களும் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

நிகழ்வில், ஊரக வளர்ச்சித் துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, இயக்குநர் கே.எஸ்.பழனிச் சாமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in