Published : 29 Oct 2015 09:42 AM
Last Updated : 29 Oct 2015 09:42 AM

செங்கல்பட்டு கொளவாய் ஏரியில் இரை கிடைக்காமல் பட்டினியால் பலியாகும் பறவைகள்

செங்கல்பட்டு கொளவாய் ஏரிக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகள் போதிய இரை கிடைக்காமல் பட்டினியால் பலியாகி வருவது தெரியவந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், வேடந் தாங்கல் பறவைகள் சரணாலய ஏரி பருவமழை இல்லாத காரணத் தால், தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால், இங்கு வரும் பறவைகள் அருகில் உள்ள நீர் நிலைகளை தேடி செல்லும் நிலை உள்ளது. இவ்வாறு வரும் பறவைகள், செங்கல்பட்டு நகரத்தையொட்டியுள்ள மலைப் பகுதியிலிருந்து வடியும் மழை நீர் மற்றும் செங்கல்பட்டு நகரத் தின் கழிவுநீரால் எப்போதும் நீர் நிரம்பி கடல்போல் காணப் படும், கொளவாய் ஏரியில் தஞ்ச மடைகின்றன. தற்போது, சீசன் தொடங்கியுள்ளதால் ஏராள மான பறவைகள் வரத்தொடங்கி யுள்ளன.

இந்நிலையில், கொளவாய் ஏரிக்கரை மற்றும் ஏரியின் உள்ளே நேற்று முன்தினம் வெளிநாட்டு பறவைகள் சில மர்மமான முறை யில் செத்து மிதந்தன. இது குறித்து சமூக ஆர்வலர்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். இதையடுத்து இறந்த பறவைகளின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பிரேத பரிசோதனையில் பறவைகள் சரியான இரை கிடைக்காமல் பட்டினியால் இறந் துள்ளது தெரியவந்தது. இது குறித்து, செங்கல்பட்டு வனச்சரக அலுவலர் கோபு கூறும்போது, ‘வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு வரும் வெளிநாட்டு பறவைகள் சில கொளவாய் ஏரியில் தஞ்ச மடைகின்றன.

சகதிகள் இருந்தால் மட்டுமே, பறவைகளுக்கு இரை யாக புழு, பூச்சிகள் கிடைக் கும். ஆனால், கொளவாய் ஏரியில் சகதிகள் இல்லாமல் தண்ணீர் அதிகம் உள்ளதால் தேவையான இரை பறவை களுக்கு கிடைக்கவில்லை. பறவை களின் உடலை பரிசோதித்த மருத்துவர்களும் இதையே தெரி வித்துள்ளனர். எனினும், கொள வாய் ஏரியில் பறவைகளை வேட் டையாடுவதை தடுக்கும் வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறோம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x