தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் பட்டாசு விற்பனை ரூ.100 கோடியை தாண்டியது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் பட்டாசு விற்பனை ரூ.100 கோடியை தாண்டியது
Updated on
1 min read

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் ஆன்-லைன் பட்டாசு விற்பனை இந்த ஆண்டு ரூ.100 கோடியை தாண்டியுள்ளது.

நவம்பர் 10-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு விற்பனை தீவிரமடைந்துள்ளது. வெளியூர்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் பைக்கு களிலும், கார்களிலும், லாரிகளிலும் வருவதால் சிவகாசியில் போக்கு வரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

மொத்த மற்றும் சில்லரை விற் பனையைத் தவிர கடந்த 3 ஆண்டு களாக சிவகாசியில் ஆன்-லைன் மூலமாகவும் பட்டாசு விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரபல பட்டாசு நிறுவனங்கள் தவிர நூற்றுக்கணக்கான சிறு நிறுவனங் களும் ஆன்-லைனில் பட்டாசுகளை விற்பனை செய்து வருகிறது. இதனால், கடந்த 2 ஆண்டுகளைவிட சிவகாசியில் இந்த ஆண்டு ஆன்-லைன் மூலம் பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது.

இதுகுறித்து, தி இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க பொதுச் செயலர் கண்ணன் கூறும்போது, “கடந்த 2 ஆண்டுகளைவிட இந்த ஆண்டு ஆன்-லைன் மூலமாக பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளது. பிரபல நிறுவனங்களுக்கு ஈடாக ஏராளமான சிறு நிறுவனங்களும் ஆன்-லைன் பட்டாசு விற்பனையில் ஈடுபட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு ஆன்-லைன் மூலம் பட்டாசு விற்பனை ரூ100 கோடியைத் தாண்டியுள்ளது.

ஆன்-லைனில் பட்டாசு வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித் துள்ளதை மறுக்க முடியாது. பிரபல நிறுவனங்கள் தரமான பட்டாசுகளை விற்பனை செய்கின்றன. ஆனால், வண்ணமயமான விளம்பரங் களுடன் சில போலி பட்டாசு நிறு வனங்களும் ஆன்-லைன் வர்த்தகத் தில் ஈடுபடுகின்றன. வெப்சைட்டில் பலவித பட்டாசு ரகங்களை வெளியிட்டு அதற்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி கொடுப்பதாகவும் விளம்பரம் செய்கின்றன.

இதனால், பொதுமக்கள் ஆர்வத்தில் பட்டாசுகளுக்கு ஆர்டர் கொடுத்து அது தரமில்லாததால் ஏமாறுவதும் உண்டு. ஆனால், தான் ஏமாற்றப்பட்டதை வாடிக்கையாளர் யாரும் பொதுவாக வெளியில் கூறுவது இல்லை என்பதால், போலி நிறுவனங்கள் ஆன்-லைனில் பட்டாசு விற்பனையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in