Published : 03 May 2014 10:27 AM
Last Updated : 03 May 2014 10:27 AM

ஆன்லைன் முறையில் மாணவர் சேர்க்கை: ம.தி.மு.க. கோரிக்கை

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளது போன்று தமிழகத்திலும் ஆன் லைன் அட்மிஷன் சிஸ்டத்தில் மாணவர் சேர்க்கை நடத்த வேண் டும் என்று ம.தி.மு.க மாநில இளை ஞரணி செயலாளர் வே.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பது:

மத்திய அரசின் அனை வருக்கும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தை தமிழக அரசு 2013-2014 ஆம் கல்வியாண்டில் அமல் படுத்த நடவடிக்கை எடுத்தது. இச்சட்டத்தின்படி தனியார் பள்ளி களில் 19 ஆயிரத்து 971 மாணவர் களும், கோவை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 163 மாணவர்களும் சேர்க்கப்பட்டதாக அறிவிக் கப்பட்டது.

இதில், 90 சதவீதம் விதி களுக்கு புறம்பாக உள்ளது. இச் சட்டத்தை நடைமுறைப்படுத்து வதில் உள்ள குளறுபடியால் உண்மையான ஏழை மாணவர்கள் பயன்பெறவில்லை.

இச் சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு வெளியிட்ட அரசு ஆணை தெளிவாகவும், முறையா கவும் இல்லாததால் அதில் பல மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று கல்வி அமைச் சருக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த மாற்ற மும் கொண்டுவரவில்லை.

விதிகளுக்கு உட்பட்டு சேர்க்கப்பட்ட மாணவர்களுக் கான முதல்கட்ட நிதி செப்டம்பர் மாதம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை தமிழக அரசால் தரப்படவில்லை. எந்த பள்ளிக்கு எவ்வளவு நிதி என்பதைக்கூட இன்னமும் அரசு முடிவு செய்யவில்லை.

கர்நாடக அரசு 45 கோடியை இத் திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளது. ஏழை மாணவர்களுக்கு கல்வி உரிமையை வழங்க வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை.

அடுத்த கல்வி ஆண்டிற்கு (2014-2015) மாணவர் சேர்க்கை ஜனவரி மாதங்களில் நடத்தக்கூடாது என்றும் மே மாதம்தான் நடத்த வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் இடையில் சேர்க்கை நடந்தால் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு செய் துள்ளது. இது ஒரு கண்துடைப்பு வேலை.

தற்போதைய அரசாணைப்படி உண்மையான ஏழை மாணவனை பள்ளிகளில் சேர்க்க இயலாது. இச் சட்டம் நேர்மையாக நடை பெறும் வகையிலும், ஏழை மாணவனுக்கு பலன்கிடைக்கும் வகையில் புதிய அரசாணை உருவாக்கப்பட வேண்டும்.

ஒற்றைச் சாளர முறையில் பள்ளிக் கல்வித் துறையே சேர்க்கை நடத்த வேண்டும். (மகாராஷ்டிரத்தில் ஆன்லைன் அட்மிஷன் சிஸ்டம் பள்ளிக்கல்வித் துறையே நடத்துகிறது) இவ் வாறு அந்த கடிதத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x