போலீஸார் லஞ்சம் கேட்டால் தராதீர்கள்: புகார் தெரிவிக்க டயல் செய்யுங்கள்

போலீஸார் லஞ்சம் கேட்டால் தராதீர்கள்: புகார் தெரிவிக்க டயல் செய்யுங்கள்
Updated on
1 min read

புதுச்சேரியில் பெட்ரோல் பங்க், ஹோட்டல், சிலிண்டர் நிறுவனங்கள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், மளிகை கடைகள், ரைஸ் மில், ஆயில் மில், கடைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோகுல கிருஷ்ணன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

தங்கள் நிறுவனங்களுக்கு உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் அல்லது வெளிநபர்கள் வந்து உயர் அதிகாரிகள் மாத லஞ்சம் மற்றும் தீபாவளி வெகுமதி கேட்பதாக தெரிவித்தால் உரிய ஆதாரங்களுடன் புகார் தாருங்கள். குறிப்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்எஸ்பி அதிகாரியிடம் உடன் தெரிவிக்கவும்.

அவரது எண்- 97115 00860. நீங்கள் தகவலை குறுந்தகவலாகவோ, தொலைபேசி மூலமோ தெரிவிக்கலாம். ‘லஞ்சம் கொடுப்பதும் குற்றம் - லஞ்சம் பெறுவதும் குற்றம்’ என்று அதில் தெரிவித்துள்ளார். இச்சுற்றறிக்கை நகலை டிஜிபி, லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்எஸ்பி, உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்பி ஆகியோருக்கும் இணைத் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in