

விவசாயிகள் நலனில் அதிமுகவுக்கு அக்கறையில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் நேற்று கரூர் மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளிலும் பொதுமக் களை சந்தித்தார். மரவாபாளையம் முத்தனூரில் கரும்பு விவசாயி களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், “விவசாயத்துக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம், கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்க வேண்டும். பயிர்களை மயில்கள் நாசப்படுத்துவதைத் தடுக்க வேண்டும்” என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
அதற்கு, “தமிழக விவசாயிகள் நலனில் அதிமுகவுக்கு அக்கறை இல்லை. முதல்வர் அமைச்சர் களையோ, அதிகாரி களையோ சந்திப்பதில்லை. மக்களைப் பற்றி அவருக்கு கவலை யில்லை என்று ஸ்டாலின் கூறினார்.
தொடர்ந்து, தளவாபாளையத் தில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களிடம் பேசிய ஸ்டாலின், உப்பிடமங்கலத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினரைச் சந்தித்தார். அப்போது, மாணவ, மாணவியரின் சிலம்பாட்டத்தை ரசித்ததுடன், அவரும் சிலம்பம் ஆடினார். தொடர்ந்து, காணியாளம் பட்டி சந்தையில் வியாபாரிகளை யும், குளித்தலை அருகேயுள்ள மைலாடியில் விவசாயிகளையும் சந்தித்துப் பேசினார்.