ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமையுமா?- மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமையுமா?- மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்கப்படுவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த ரமேஷ் குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுற்றுலாத்தலமாகும். இங்கு குலசேகர பாண்டிய மன்னன் கட்டிய மீனாட்சி அம்மன் கோவில், பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில், செட்டிநாடு அரண்மனை, உலகப் புகழ்பெற்ற அறிவியல் தொழில்நுட்ப மையமான சிக்ரி உள்ளன. காரைக்குடிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

இங்கு உற்பத்தி செய்யப்படம் கைத்தறி பொருட்கள், உணவுப் பொருட்கள் உலகம் முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது. 3-ம் உலகப் போருக்கு முன்பு செட்டிநாடு பகுதியில் விமானம் நிலையம் இருந்துள்ளது.

சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் ஓடுதளம் மற்றும் வசதிகள் உள்ளன. இவற்றை மேம்படுத்தி செட்டிநாடு பகுதியில் விமான நிலையம் அமைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், காரைக்குடி ஒரு புகழ்பெற்ற தலமாக இருக்கிறது. ராமநாதபுரம் அருகே உள்ளது. இங்குள்ள ராமேஸ்வரம் கடைக்கோடி நகரமாகவும், புன்னிய தலமாகவும் உள்ளது. இங்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதனால் ராமநாதபுரம் பகுதியில் ஏன் விமான நிலையம் அமைக்கக்கூடாது? இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

பின்னர், விசாரணையை நவ.18-க்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in