விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: மேலும் ஒரு பெண் டிஎஸ்பியிடம் விசாரணை?

விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: மேலும் ஒரு பெண் டிஎஸ்பியிடம் விசாரணை?
Updated on
1 min read

விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில், அவர் எழுதியதாக கூறப்படும் மேலும் 2 பக்க கடிதம் நேற்று முன்தினம் வாட்ஸ்-அப் மூலம் வெளியானது. அந்த கடிதத் தில் குறிப்பிட்டுள்ள கீதாஞ்சலி என்பவரும் டிஎஸ்பியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதையடுத்து அவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட நேரத்தில் அவர் எழுதியதாக கூறப்படும் 9 பக்க கடிதத்தை காவல் துறையினர் கைப்பற்றி, அதுகுறித்த விவரங் களையும் வெளியிட்டனர்.

அச்சமயத்தில் கடிதத்தில் மேலும் சில பக்கங்களை காவல் துறையினர் மறைத்து விட்டனர். அதை வெளியிட வேண்டும் என, விஷ்ணுபிரியாவின் பெற்றோர் உட்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். எனினும் 9 பக்க கடிதம் மட்டுமே கைப்பற்றப்பட்டது என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இச்சூழலில் நேற்று முன்தினம் டிஎஸ்பி விஷ்ணுபிரியா எழுதிய தாக கூறப்படும் 2 பக்க கடிதம் வாட்ஸ்-அப் மூலம் வெளியா னது. அந்த கடிதத்தில் டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் லேப்டாப், செல்போன், டேப்லெட் உள்ளிட்ட வற்றின் ரகசிய குறியீட்டு எண் விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அக்கடிதத்தில் கீதாஞ்சலி என்பவருக்கு ரூ.4 ஆயிரம் பணம் கொடுக்கும்படி தெரிவிக்கப்பட்டுள் ளது. தவிர, கடிதத்தின் கீழ் விஷ்ணுபிரியா என எழுதி ஜூலை 15-ம் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.

கீழக்கரை டிஎஸ்பி மகேஸ் வரி போலவே, டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் மற்றொரு தோழி கீதாஞ்சலி என்பது தெரியவந்துள் ளது. இவர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் டிஎஸ்பியாக உள்ளார். விஷ்ணுபிரியா தற் கொலை சம்பந்தமாக அவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட உள்ளதாக சிபிசிஐடி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in